*உலகின் முதலாவது நிலத்தடி நீர்மட்டத்திற்கு கீழ் அமைந்த ஆடம்பர தங்கும் விடுதி*
உலகின் முதலாவது நிலத்தடி நீர்மட்டத்திற்கு கீழ் அமைந்த ஆடம்பர தங்கும் விடுதியான இண்டர்கான்டினென்டல் ஷாங்காய் வொண்டர்லேண்ட் விடுதியானது சீனாவின் ஷாங்காய் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் சாங்கியாங் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது.
Sunday, December 2, 2018
உலகின் முதலாவது நிலத்தடி நீர்மட்டத்திற்கு கீழ் அமைந்த ஆடம்பர தங்கும் விடுதி
UNICEF -ஆனது குழந்தைகளின் உரிமைகளுக்காக போராட அசாம் பிரபல பாடகியை நியமனம் செய்துள்ளது
*UNICEF -ஆனது குழந்தைகளின் உரிமைகளுக்காக போராட அசாம் பிரபல பாடகியை நியமனம் செய்துள்ளது*
ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகளுக்கான அவசர நிதியமானது (UNICEF – United Nations International Children’s Emergency Fund) குழந்தைகளின் உரிமைகளுக்காக போராட வடகிழக்குப் பிராந்தியத்திற்காக முதல் இளைஞர் பரப்புனராக அசாம் பிரபல பாடகியான நஹீத் அப்ரின் என்பவரை நியமித்துள்ளது.
தீனதயாள் அந்த்யோதயா திட்டத்திற்காக பைசா என்ற மின்னணு தளம் தொடக்கம்
தீனதயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் (DAY – NULM/Deendayal Antyodaya Yojana. National Urban Livelihoods Mission) கடன்களை விரைவாக செயலாக்கம் செய்வதற்காக, வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகமானது, மலிவான கடன் வசதி மற்றும் வட்டி உதவித் தொகை அணுகலுக்காக (PAiSA) பைசா என்ற மின்னணு தளத்தை புது டெல்லியில் நடைபெற்ற மாநகராட்சி நிதி மற்றும் நகர்புற திட்டமிடல் மீதான தேசிய பட்டறையின் போது தொடங்கப்பட்டது.
PAiSA – Portal for Affordable Credit and Interest Subvention Access
நேரடி வரிச் சட்டத்தை வரைவு செய்யும் பணிக்குழுவின் தலைவராக அகிலேஷ் ரஞ்சன் நியமனம்
மத்திய நேரடி வரிகளுக்கான ஆணையத்தின் உறுப்பினரான அகிலேஷ் ரஞ்சனை புதிய நேரடி வரிச் சட்டத்தை வரைவு செய்யும் பணிக்குழுவின் தலைவராக மத்திய அமைச்சகம் நியமித்துள்ளது.
இவர் அரவிந்த் மோடிக்கும் பதிலாக பதவியேற்க உள்ளார்.
இப்பணிக் குழுவானது, 1961-ன் வருமான வரிச் சட்டத்தை, மதிப்பாய்வு செய்யும் நாட்டின் பொருளாதார தேவைகளுடன் ஒத்திசையக் கூடிய புதிய நேர்முக வரிச் சட்டத்தை வரைவு செய்வதற்காக நவம்பர் 2017ல் அமைக்கப்பட்டது.
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த தூண் தென்முடியனூரில் கண்டுபிடிப்பு
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரம சோழன் ஆட்சிக் காலத்தில், பெண்ணை வடகரை மேற்கோவலூர் நாட்டு இலச்சியமுடையான் உழியன் மாதன் என்பவர் சோழாந்தகப் பல்லவராயன் வடுகன் ஆளவந்தான் நினைவாக, அமைக்கப்பட்ட தூம்பானது, திருவண்ணாமலை அருகே தென்முடியனூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா விமானப்படைகள் நாளை (03.12.2018) முதல் 12 நாள் கூட்டுப் பயிற்சி
அமெரிக்காவின் முதன்மையான ராணுவ கூட்டாளியாக இந்தியாவை கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இந்திய விமானப்படை வீரர்கள் நாளை முதல் 12 நாட்களுக்குமேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள காலய்குன்டா மற்றும் பனாகர் விமானப்படைத் தளங்களில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
இருநாடுகளுக்கு இடையில் நான்காவது முறையாக நடைபெறும் இந்த பயிற்சிக்காக அமெரிக்காவில் இருந்து F15 C/D and C-130 ரகப்போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளன.
இந்தியாவின் சார்பில் Su-30 MKI, Jaguar, Mirage 2000, C-130J உள்ளிட்ட போர் விமானங்கள் பங்கேற்கும் இந்த கூட்டுப்போர் பயிற்சிக்கு எக்ஸ் கோப் இந்தியா (Ex Cope India-18) என பெயரிடப்பட்டுள்ளது.
Saturday, December 1, 2018
தேசிய துப்பாக்கி சுடும் போட்டி
தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன் போட்டியில் நட்சத்திர வீராங்கனைகள் மானு பாக்கர், ஹீனா சித்து ஆகியோரை பின்னுக்கு தள்ளி, 13 வயது இஷா சிங் மூன்று தங்கம் வென்றுள்ளார்.
திருவனந்தபுரத்தில் 62-ஆவது தேசிய துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன
இந்த போட்டியில் 10 மீ ஏர்பிஸ்டல் பிரிவு மகளிர், யூத் மகளிர், ஜூனியர் மகளிர் போட்டிகளில் தெலங்கானாவைச் சேர்ந்த, இளம் வீராங்கனை இஷா சிங் முறையே ஹீனா சித்து, மானு பாக்கர், ஸ்வேதா சிங் ஆகியோரை வென்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.