Showing posts with label daily current affairs. Show all posts
Showing posts with label daily current affairs. Show all posts

Friday, November 16, 2018

சூரியனுக்கு அருகில் புதிய பூமி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


சூரியனுக்கு அருகில் ‘சூப்பர் பூமி’ ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது சூரியனுக்கு மிக அருகில் உள்ள சிறிய நட்சத்திரமாகும். 

இந்த நட்சத்திரத்தை ஒரு கிரகம் சுற்றிக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கு ‘பர்நார்ட் நட்சத்திரம் பி’ என பெயர் வைத்துள்ளனர். இது, ‘சூப்பர் பூமி’ என்றும் அழைக்கப்படுகிறது. 

இது பூமியை விட 3.2 மடங்கு பெரியது. சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமிக்கு அருகே இருக்கும் 2வது கிரகமாக இது அறியப்படுகிறது. 

இந்த கிரகம் பர்நார்ட் நட்சத்திரத்தை 233 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. 

சூரியனில் இருந்து பூமி பெறும் சக்தியில் 2 சதவீதத்தை மட்டுமே இந்த புதிய கிரகம் தனது நட்சத்திரத்திடம் இருந்து பெறுகிறது. 

*ஸ்டீல் இந்தியா பிளிட்ஸ் செஸ் போட்டி -பட்டம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்

கொல்கத்தாவில் நடைபெற்ற டாடா ஸ்டீல் இந்தியா பிளிட்ஸ் செஸ் போட்டியில், இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

 கடந்த 2013-இல் சென்னையில் நடந்த உலக சாம்பியன் போட்டியில் மாக்னஸ் கார்ல்செனிடம் தோற்ற பின் இந்தியாவில் ஆடும் முதல் போட்டி இதுவாகும்.

Wednesday, November 14, 2018

ஜிசாட் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் (14-11-2018) அன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 ஆகும். தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-வது செயற்கைக்கோள் ஜிசாட்-29 இதில் பொருத்தப்பட்டு உள்ளது. 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 33-வது ராக்கெட் மற்றும் இந்த ஆண்டு ஏவப்படும் 5-வது ராக்கெட் இதுவாகும்.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட எரிபொருள், திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் என்ஜின் ஆகிய 3 நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும்.  இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியதன் மூலம் இஸ்ரோ அடுத்த சாதனைக்கு தயாராகி வருகிறது. கனரக வகையை சேர்ந்த இந்த ராக்கெட் மூலம் சுமார் 10 டன் எடை கொண்ட பொருளை எளிதாக விண்ணுக்கு தூக்கிச் செல்ல முடியும். ஜிசாட்-29 செயற்கைக்கோள் 3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்புத்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

மேற்கு வங்காளத்தின் பெயரை மாற்ற முடியாது - மத்திய அரசு

நடப்பு நிகழ்வுகள்-15.11.2018

மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்ற வேண்டும் என்று, அந்த மாநிலத்தை ஆளுகிற மம்தா பானர்ஜி அரசு விரும்புகிறது. இது தொடர்பான கோரிக்கையை, மாநில சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அதை மத்திய அரசு நிராகரித்து விட்டது. அண்டை நாடான வங்காள தேசத்தின் பெயரைப் போன்று இருப்பதால் பங்களா என்ற பெயர் நிராகரிக்கப்பட்டு அந்த கோப்பு, மாநில அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

சிக்குன் குனியா நோயை குணப்படுத்த புளியங்கொட்டை - ஐஐடி பேராசிரியர்கள் கண்டுபிடிப்பு

சிக்குன் குனியா நோயை குணப்படுத்த புளியங்கொட்டை - ஐஐடி பேராசிரியர்கள் கண்டுபிடிப்பு

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி.யில் பேராசிரியர்களாக பணியாற்றி வரும் ‌ஷாய்லி தோமர், பிரவீந்திர குமார் ஆகியோர் புளியங்கொட்டையின் மூலம் சிக்குன் குனியா நோயை குணப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்து இருக்கின்றனர். இதற்காக அவர்கள் காப்புரிமை கோரியும் பதிவு செய்து உள்ளனர்.

புளியில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளன. இது ஒரு சிறந்த ஆயுர்வேத உணவும் ஆகும். புளியங்கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் லெக்டின் என்னும் ஒருவித புரதச்சத்து, நோய்க்கிருமிகள் உடலில் எளிதில் புகுந்து விடாத வகையில் உடலில் உள்ள உயிர் அணுக்களை பலப்படுத்துகிறது.

இதன் மூலம் சிக்குன் குனியா நோயை பரப்பும் வைரஸ்கள் 64 சதவீதம் வரை கட்டுப்படுத்தப்படுகிறது. தற்போது மருந்து சந்தையில் இந்த நோயை குணப்படுத்துவதற்கான போதிய மருந்துகள் கிடைக்காத நிலையில் லெக்டினை பயன்படுத்தி சிக்குன் குனியாவிற்கு சிகிச்சை அளிப்பதே சிறந்த வழிமுறையாக இருக்கும்.

உலக நீரிழிவு நோய் தினம் (World Diabetes Day)

ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் 14ஆம் தேதி உலக நீரிழிவு நோய் தினமாக (World Diabetes Day) கொண்டாடப்படுகிறது. நீரிழிவு நோய் பற்றி:

1. டயாபடீஸ் என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நீரிழிவு நோய், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் ஒரு metabolic disorder.

2. எகிப்திய புராதனப் பதிவுகளில் காணக் கிடைக்கும் நோய்களில் முக்கியமான ஒன்று, நீரிழிவு நோய்.

3. உலகில் ஏறத்தாழ 350 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருக்கிறது.

4. 2030ஆம் ஆண்டில் நிகழும் மரணங்களுக்கு ஏழாவது முக்கியமான காரணமாக இது இருக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது.

5. நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன: டைப் 1 மற்றும் டைப் 2.

6. கண் பார்வை தெரியாமல் போவதற்கு, கை கால்களை அகற்றுவதற்கு மற்றும் சிறுநீரகப் பிரச்சினைக்கு நீரிழிவு நோயே முக்கியமான காரணமாக இருக்கிறது.

7. 2012ஆம் ஆண்டில் மட்டும், நீரிழிவு நோயின் நேரடித் தாக்குதலால் 1.5 மில்லியன் மக்கள் இறந்து போயினர்.

8. மற்ற நாடுகளைவிட இந்தியாவில்தான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.

9. 1991ஆம் ஆண்டு, சர்வதேச டயாபடீஸ் ஃபெடரேஷனும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து, உலக நீரிழிவு தினத்தை முதன்முதலாகக் கொண்டாடினர்.

10. தற்போது 160க்கும் அதிகமான நாடுகளும், 230 நிறுவனங்களும் பங்கேற்கின்றன.