Showing posts with label tamil current affairs. Show all posts
Showing posts with label tamil current affairs. Show all posts

Friday, November 16, 2018

சூரியனுக்கு அருகில் புதிய பூமி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


சூரியனுக்கு அருகில் ‘சூப்பர் பூமி’ ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது சூரியனுக்கு மிக அருகில் உள்ள சிறிய நட்சத்திரமாகும். 

இந்த நட்சத்திரத்தை ஒரு கிரகம் சுற்றிக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கு ‘பர்நார்ட் நட்சத்திரம் பி’ என பெயர் வைத்துள்ளனர். இது, ‘சூப்பர் பூமி’ என்றும் அழைக்கப்படுகிறது. 

இது பூமியை விட 3.2 மடங்கு பெரியது. சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமிக்கு அருகே இருக்கும் 2வது கிரகமாக இது அறியப்படுகிறது. 

இந்த கிரகம் பர்நார்ட் நட்சத்திரத்தை 233 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. 

சூரியனில் இருந்து பூமி பெறும் சக்தியில் 2 சதவீதத்தை மட்டுமே இந்த புதிய கிரகம் தனது நட்சத்திரத்திடம் இருந்து பெறுகிறது. 

மீனவர்களுக்காக புதிய மொபைல் ஆண்ட்ராய்டு ஆப்

மீனவர்களுக்காக, 'THOONDIL' என்ற, புதிய மொபைல் ஆப் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் அறிமுக விழா, சென்னையில் நடந்தது. 

அமைச்சர் ஜெயகுமார், மீனவர்களுக்காக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வடிவமைக்கப்பட்ட, 'துாண்டில்' என்ற, புதிய மொபைல் ஆப் துவக்கப்பட்டு உள்ளது. 

இந்த, 'மொபைல் ஆப்'பில், மீன் கிடைக்கும் இடம், மழை, புயல் முன்னெச்சரிக்கை குறித்து தகவல் பெறலாம்.

மீனவர்கள் கரையிலிருந்து எப்போது புறப்பட்டனர் என்பதையும், அவர்கள் கடலில் உள்ள இடத்தையும் அறிய முடியும்.  டவர் இல்லாத இடத்தில், படகு இருந்தால், படகு உள்ள இடத்தை, ஜி.பி.எஸ்., கருவி வழியாகவே கண்டறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

*ஸ்டீல் இந்தியா பிளிட்ஸ் செஸ் போட்டி -பட்டம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்

கொல்கத்தாவில் நடைபெற்ற டாடா ஸ்டீல் இந்தியா பிளிட்ஸ் செஸ் போட்டியில், இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

 கடந்த 2013-இல் சென்னையில் நடந்த உலக சாம்பியன் போட்டியில் மாக்னஸ் கார்ல்செனிடம் தோற்ற பின் இந்தியாவில் ஆடும் முதல் போட்டி இதுவாகும்.

Wednesday, November 14, 2018

ஜிசாட் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் (14-11-2018) அன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 ஆகும். தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-வது செயற்கைக்கோள் ஜிசாட்-29 இதில் பொருத்தப்பட்டு உள்ளது. 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 33-வது ராக்கெட் மற்றும் இந்த ஆண்டு ஏவப்படும் 5-வது ராக்கெட் இதுவாகும்.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட எரிபொருள், திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் என்ஜின் ஆகிய 3 நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும்.  இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியதன் மூலம் இஸ்ரோ அடுத்த சாதனைக்கு தயாராகி வருகிறது. கனரக வகையை சேர்ந்த இந்த ராக்கெட் மூலம் சுமார் 10 டன் எடை கொண்ட பொருளை எளிதாக விண்ணுக்கு தூக்கிச் செல்ல முடியும். ஜிசாட்-29 செயற்கைக்கோள் 3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்புத்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

மேற்கு வங்காளத்தின் பெயரை மாற்ற முடியாது - மத்திய அரசு

நடப்பு நிகழ்வுகள்-15.11.2018

மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்ற வேண்டும் என்று, அந்த மாநிலத்தை ஆளுகிற மம்தா பானர்ஜி அரசு விரும்புகிறது. இது தொடர்பான கோரிக்கையை, மாநில சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அதை மத்திய அரசு நிராகரித்து விட்டது. அண்டை நாடான வங்காள தேசத்தின் பெயரைப் போன்று இருப்பதால் பங்களா என்ற பெயர் நிராகரிக்கப்பட்டு அந்த கோப்பு, மாநில அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

TNPSC மீண்டும் புதிய அறிவித்த காலிபணியிடங்கள்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Librarian பணிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Librarian


காலியிடங்கள்: 29


Librarian Grade-I in Industries and Commerce Department – 01


Librarian in Agriculture Department – 02


Film Librarian in Agriculture Department – 01


Librarian and Information Assistant Grade-I for Anna Centenary Library in Public Libraries Department – 05


Librarian and Information Assistant Grade-II for Anna Centenary Library in Public Libraries Department – 19


Librarian in Legislative Assembly Secretariat - 01


கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் Library Science/Library and Information Science பிரிவில் இளநிலை/முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:  30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/SCA/ST/MBC/DC/BC(OBCM)/BCM/ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை.


விண்ணப்பக்கட்டணம்:


தேர்வு கட்டணம் ரூ.150ம்,  பதிவுக் கட்டணமாக  ரூ.150ம் செலுத்த வேண்டும். ஏற்கனவே, TNPSC-ல் இணையத்தில் நிரந்தர பதிவு செய்திருப்பவர்கள் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை. 


தேர்ந்தெடுக்கும் முறை:


எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியானவர்கள் www.tnpsc.gov.inஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில்விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  14.12.2018


விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 18.12.2018


எழுத்துத்தேர்வு  நடைபெறும் தேதி:  23.02.2019


கூடுதல் தகவல்களுக்கு http://tnpsc.gov.in/notifications/2018_33_notyfn_Librarian.pdf


சிக்குன் குனியா நோயை குணப்படுத்த புளியங்கொட்டை - ஐஐடி பேராசிரியர்கள் கண்டுபிடிப்பு

சிக்குன் குனியா நோயை குணப்படுத்த புளியங்கொட்டை - ஐஐடி பேராசிரியர்கள் கண்டுபிடிப்பு

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி.யில் பேராசிரியர்களாக பணியாற்றி வரும் ‌ஷாய்லி தோமர், பிரவீந்திர குமார் ஆகியோர் புளியங்கொட்டையின் மூலம் சிக்குன் குனியா நோயை குணப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்து இருக்கின்றனர். இதற்காக அவர்கள் காப்புரிமை கோரியும் பதிவு செய்து உள்ளனர்.

புளியில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளன. இது ஒரு சிறந்த ஆயுர்வேத உணவும் ஆகும். புளியங்கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் லெக்டின் என்னும் ஒருவித புரதச்சத்து, நோய்க்கிருமிகள் உடலில் எளிதில் புகுந்து விடாத வகையில் உடலில் உள்ள உயிர் அணுக்களை பலப்படுத்துகிறது.

இதன் மூலம் சிக்குன் குனியா நோயை பரப்பும் வைரஸ்கள் 64 சதவீதம் வரை கட்டுப்படுத்தப்படுகிறது. தற்போது மருந்து சந்தையில் இந்த நோயை குணப்படுத்துவதற்கான போதிய மருந்துகள் கிடைக்காத நிலையில் லெக்டினை பயன்படுத்தி சிக்குன் குனியாவிற்கு சிகிச்சை அளிப்பதே சிறந்த வழிமுறையாக இருக்கும்.

உலக நீரிழிவு நோய் தினம் (World Diabetes Day)

ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் 14ஆம் தேதி உலக நீரிழிவு நோய் தினமாக (World Diabetes Day) கொண்டாடப்படுகிறது. நீரிழிவு நோய் பற்றி:

1. டயாபடீஸ் என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நீரிழிவு நோய், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் ஒரு metabolic disorder.

2. எகிப்திய புராதனப் பதிவுகளில் காணக் கிடைக்கும் நோய்களில் முக்கியமான ஒன்று, நீரிழிவு நோய்.

3. உலகில் ஏறத்தாழ 350 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருக்கிறது.

4. 2030ஆம் ஆண்டில் நிகழும் மரணங்களுக்கு ஏழாவது முக்கியமான காரணமாக இது இருக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது.

5. நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன: டைப் 1 மற்றும் டைப் 2.

6. கண் பார்வை தெரியாமல் போவதற்கு, கை கால்களை அகற்றுவதற்கு மற்றும் சிறுநீரகப் பிரச்சினைக்கு நீரிழிவு நோயே முக்கியமான காரணமாக இருக்கிறது.

7. 2012ஆம் ஆண்டில் மட்டும், நீரிழிவு நோயின் நேரடித் தாக்குதலால் 1.5 மில்லியன் மக்கள் இறந்து போயினர்.

8. மற்ற நாடுகளைவிட இந்தியாவில்தான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.

9. 1991ஆம் ஆண்டு, சர்வதேச டயாபடீஸ் ஃபெடரேஷனும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து, உலக நீரிழிவு தினத்தை முதன்முதலாகக் கொண்டாடினர்.

10. தற்போது 160க்கும் அதிகமான நாடுகளும், 230 நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த 11.11.2018 தொகுதி-II தேர்வு நடைபெற்று அதற்கான விடைத்தாள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது இவற்றில் மாற்றம் இருந்தால் மறுபரிசீலனை செய்யலாம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஞாயிற்றுகிழமை (11.11.2018) தொகுதி-II க்கான தேர்வினை தமிழகம் முழுவதும் 116 மையங்களில் நடத்தியது.

மேற்படி தேர்வுக்கான தோராய விடைகள் வருகிற புதன் (14.11.2018) அன்று இணைய தளத்தில் வெளியிடப்படவுள்ளது.
இவ்வாறு வெளியிடப்படும் உத்தேச விடைகளில் தவறு இருப்பின் விண்ணப்பதாரர்கள் அதனை தேர்வாணையத்திற்கு தெரிவித்து சரியான விடைகளை கோர முடியும். அதற்கான கோரிக்கைகள் விண்ணப்பதாரர்களிடமிருந்து இதுநாள் வரை எழுத்துப்பூர்வமாக கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டு வந்தன.

அவ்வாறு பெறப்படும் கோரிக்கைகளை அட்டவணைப்படுத்தி, சீர்படுத்தி வினா எண் வாரியாக பிரித்து எடுத்து அதற்கான வலுச்சேர்க்கும் ஆவணங்களை நகலெடுத்து உரிய வல்லுநர் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப சுமார் இரண்டு மாத கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே அத்தேர்விற்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த கால தாமதத்தை குறைக்க தேர்வாணையம் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
புதிய முறை:
வினாத்தாள் தவறு குறித்த கோரிக்கைகள் இந்த தொகுதி-II  தேர்வு முதல் இணைய வழியில் மட்டுமே பெறப்படும். தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே அத்தேர்வுக்குறிய தோராய விடைகளை மறுத்து சரியான விடைகளை கோர முடியும்.

தேர்வர்கள் எந்த வரிசை கேள்வித்தாளை பயன்படுத்தி விடையளித்திருந்தாலும், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி மட்டுமே தேர்வர்கள் தோராய விடைகளை மறுத்து சரியான விடைகளை கோர முடியும். 

விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். பதிவு எண் மற்றும் விண்ணப்ப எண் ஆகிய இரண்டும் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலேயே இருக்கும்.

தேர்வர்கள் தேர்வு எழுதிய பாடத்தினை தேர்வு செய்து பின்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி வினா எண்-ஐ தெரிவு செய்தால் அதற்கான கேள்வி மற்றும் சரியான விடைக்குறிப்பு திரையில் தோன்றும்.

விடைக்குறிப்பில் விடைகளில் மாறுபட்ட கருத்து இருப்பின் அதன் கீழே தோன்றும் சரியான விடை / விடைகளை தெரிவு செய்ய வேண்டும். பின்னர் அதன் கீழே இருக்கும் குறிப்பு கலத்தில் உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும். அதனைத் தொடர்ந்து தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது, அதன் ஆசிரியர், பதிப்பு வருடம், பதிப்பாளர் பக்கம் எண் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

பின்னர், தேர்வர்கள் தெரிவித்த விடைக்கு வலுச்சேர்க்கும் உரிய ஆவணங்களை PDF கோப்புக்களாக பதிவேற்றம் செய்யவேண்டும். தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது என்பதற்கான தகவல்களும் விடைக்கு வலுச்சேர்க்கும் உரிய ஆவணங்களும் இல்லாத கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.

பதிவேற்றம் செய்தபின் அதற்கான ஒப்புகையினை தேர்வர்கள் அச்சிட்டுக்கொள்ளலாம்.
• ஒருவர் எத்தனை விடைகளுக்கு வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கலாம்.

• கையால் எழுதப்பட்ட குறிப்புகள் விடைக்கான ஆதாரமாக கருதப்பட மாட்டாது.

• அஞ்சல் / மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது 

11.11.2018 அன்று நடந்த தொகுதி-II தேர்வுக்கான தோராயமான விடைக்குறிப்புகள் 14.11.2018 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விடைக்குறிப்புகளில் தவறு இருப்பின் அதற்கான கோரிக்கைகளை தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டும் வருகிற 20.11.2018 க்குள் இதற்கென உருவாக்கப்பட்டுள்ள இணைய பக்கத்தின் மூலம் மட்டும் அனுப்பலாம். 20.11.2018 க்கு பின்னர் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
க. நந்தகுமார், இ.ஆ.ப.,
செயலாளர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு)