Showing posts with label tnpsc currents affair's. Show all posts
Showing posts with label tnpsc currents affair's. Show all posts

Friday, November 16, 2018

மீனவர்களுக்காக புதிய மொபைல் ஆண்ட்ராய்டு ஆப்

மீனவர்களுக்காக, 'THOONDIL' என்ற, புதிய மொபைல் ஆப் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் அறிமுக விழா, சென்னையில் நடந்தது. 

அமைச்சர் ஜெயகுமார், மீனவர்களுக்காக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வடிவமைக்கப்பட்ட, 'துாண்டில்' என்ற, புதிய மொபைல் ஆப் துவக்கப்பட்டு உள்ளது. 

இந்த, 'மொபைல் ஆப்'பில், மீன் கிடைக்கும் இடம், மழை, புயல் முன்னெச்சரிக்கை குறித்து தகவல் பெறலாம்.

மீனவர்கள் கரையிலிருந்து எப்போது புறப்பட்டனர் என்பதையும், அவர்கள் கடலில் உள்ள இடத்தையும் அறிய முடியும்.  டவர் இல்லாத இடத்தில், படகு இருந்தால், படகு உள்ள இடத்தை, ஜி.பி.எஸ்., கருவி வழியாகவே கண்டறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

*ஸ்டீல் இந்தியா பிளிட்ஸ் செஸ் போட்டி -பட்டம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்

கொல்கத்தாவில் நடைபெற்ற டாடா ஸ்டீல் இந்தியா பிளிட்ஸ் செஸ் போட்டியில், இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

 கடந்த 2013-இல் சென்னையில் நடந்த உலக சாம்பியன் போட்டியில் மாக்னஸ் கார்ல்செனிடம் தோற்ற பின் இந்தியாவில் ஆடும் முதல் போட்டி இதுவாகும்.

Wednesday, November 14, 2018

ஜிசாட் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் (14-11-2018) அன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 ஆகும். தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-வது செயற்கைக்கோள் ஜிசாட்-29 இதில் பொருத்தப்பட்டு உள்ளது. 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 33-வது ராக்கெட் மற்றும் இந்த ஆண்டு ஏவப்படும் 5-வது ராக்கெட் இதுவாகும்.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட எரிபொருள், திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் என்ஜின் ஆகிய 3 நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும்.  இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியதன் மூலம் இஸ்ரோ அடுத்த சாதனைக்கு தயாராகி வருகிறது. கனரக வகையை சேர்ந்த இந்த ராக்கெட் மூலம் சுமார் 10 டன் எடை கொண்ட பொருளை எளிதாக விண்ணுக்கு தூக்கிச் செல்ல முடியும். ஜிசாட்-29 செயற்கைக்கோள் 3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்புத்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய பெண் தேர்வு

அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின்போது இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.
நியோமி ராவ் தேர்வுக்கு அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபை தனது ஒப்புதலை வழங்க வேண்டும். அந்த சபையில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், நியோமி ராவ் தேர்வுக்கு ஒப்புதல் கிடைப்பது உறுதி.
நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ள கோர்ட்டில் இந்தியரான சீனிவாசன் ஏற்கனவே நீதிபதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்காளத்தின் பெயரை மாற்ற முடியாது - மத்திய அரசு

நடப்பு நிகழ்வுகள்-15.11.2018

மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்ற வேண்டும் என்று, அந்த மாநிலத்தை ஆளுகிற மம்தா பானர்ஜி அரசு விரும்புகிறது. இது தொடர்பான கோரிக்கையை, மாநில சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அதை மத்திய அரசு நிராகரித்து விட்டது. அண்டை நாடான வங்காள தேசத்தின் பெயரைப் போன்று இருப்பதால் பங்களா என்ற பெயர் நிராகரிக்கப்பட்டு அந்த கோப்பு, மாநில அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

TNPSC மீண்டும் புதிய அறிவித்த காலிபணியிடங்கள்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Librarian பணிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Librarian


காலியிடங்கள்: 29


Librarian Grade-I in Industries and Commerce Department – 01


Librarian in Agriculture Department – 02


Film Librarian in Agriculture Department – 01


Librarian and Information Assistant Grade-I for Anna Centenary Library in Public Libraries Department – 05


Librarian and Information Assistant Grade-II for Anna Centenary Library in Public Libraries Department – 19


Librarian in Legislative Assembly Secretariat - 01


கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் Library Science/Library and Information Science பிரிவில் இளநிலை/முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:  30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/SCA/ST/MBC/DC/BC(OBCM)/BCM/ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை.


விண்ணப்பக்கட்டணம்:


தேர்வு கட்டணம் ரூ.150ம்,  பதிவுக் கட்டணமாக  ரூ.150ம் செலுத்த வேண்டும். ஏற்கனவே, TNPSC-ல் இணையத்தில் நிரந்தர பதிவு செய்திருப்பவர்கள் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை. 


தேர்ந்தெடுக்கும் முறை:


எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியானவர்கள் www.tnpsc.gov.inஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில்விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  14.12.2018


விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 18.12.2018


எழுத்துத்தேர்வு  நடைபெறும் தேதி:  23.02.2019


கூடுதல் தகவல்களுக்கு http://tnpsc.gov.in/notifications/2018_33_notyfn_Librarian.pdf


உலக நீரிழிவு நோய் தினம் (World Diabetes Day)

ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் 14ஆம் தேதி உலக நீரிழிவு நோய் தினமாக (World Diabetes Day) கொண்டாடப்படுகிறது. நீரிழிவு நோய் பற்றி:

1. டயாபடீஸ் என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நீரிழிவு நோய், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் ஒரு metabolic disorder.

2. எகிப்திய புராதனப் பதிவுகளில் காணக் கிடைக்கும் நோய்களில் முக்கியமான ஒன்று, நீரிழிவு நோய்.

3. உலகில் ஏறத்தாழ 350 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருக்கிறது.

4. 2030ஆம் ஆண்டில் நிகழும் மரணங்களுக்கு ஏழாவது முக்கியமான காரணமாக இது இருக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது.

5. நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன: டைப் 1 மற்றும் டைப் 2.

6. கண் பார்வை தெரியாமல் போவதற்கு, கை கால்களை அகற்றுவதற்கு மற்றும் சிறுநீரகப் பிரச்சினைக்கு நீரிழிவு நோயே முக்கியமான காரணமாக இருக்கிறது.

7. 2012ஆம் ஆண்டில் மட்டும், நீரிழிவு நோயின் நேரடித் தாக்குதலால் 1.5 மில்லியன் மக்கள் இறந்து போயினர்.

8. மற்ற நாடுகளைவிட இந்தியாவில்தான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.

9. 1991ஆம் ஆண்டு, சர்வதேச டயாபடீஸ் ஃபெடரேஷனும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து, உலக நீரிழிவு தினத்தை முதன்முதலாகக் கொண்டாடினர்.

10. தற்போது 160க்கும் அதிகமான நாடுகளும், 230 நிறுவனங்களும் பங்கேற்கின்றன.