Monday, October 4, 2021
பால்வளத்துறையில் பணியிட மாறுதல், புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
பால்வளத்துறையில் பணியிட மாறுதல், புதிய பணி
நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து
ஏமாற வேண்டாம் – மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்
திரு.சா.மு.நாசர் அவர்கள் எச்சரிக்கை.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான
அரசானது மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி
வருகின்றது. அந்தவகையில் பொது மக்களின் நலன் கருதி தமிழக அரசு
அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு
ரூ.3 குறைத்ததினால் ஆவின் பால் விற்பனை வெகு வேகமாக
அதிகரித்துள்ளது. இதனால் 1 கோடி நுகர்வோர்கள் மற்றும் 450
நிறுவனங்கள் பயனடைந்துள்ளனர். புதிதாக ஏறக்குறைய 6 லட்சம்
நுகர்வோர்கள் ஆவினில் இணைந்தமையால் ஆவினின் சந்தை மதிப்பு
அதிகரித்துள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆவின் பால், பால்
பொருட்கள் விற்பனையை அதிகரிக்கவும், செயலிழந்த பால் உற்பத்தி
சங்கங்களைப் புதுப்பிக்கவும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை
மேம்படுத்தவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று
அறிவுறுத்தியதன், அடிப்படையில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள்
கூட்டுறவு இணையம், மாவட்ட ஒன்றியங்கள் (ஆவின்) மற்றும்
பால்வளத்துறையில் செயல்பாடுகளை துரிதமாக விரைந்து நடவடிக்கை
எடுக்க நிருவாக காரணங்களுக்காக பணியிட மாறுதல்களுக்கு ஆணை
வெளியிடப்படுகிறது.
எனவே ஆவின், பால்வளத்துறையில் பணியிட மாறுதல் மற்றும்
புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து
ஏமாற வேண்டாம் என்று மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்
திரு.சா.மு.நாசர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
Tuesday, September 21, 2021
விஏஓ தேர்வுக்கு தயாரா? உங்களுக்கான சில முக்கிய குறிப்புகள்! | #TNPSC
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வு; தேர்வர்களுக்கான முக்கிய தகவல்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கு தயாராகுபவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இப்போது பார்ப்போம். தமிழக இளைஞர்கள் பெரும்பாலானோரின் கனவு அரசு வேலை. அதிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு இளைஞர்களிடையே கடும் போட்டி இருக்கும். ஆண்டுதோறும் TNPSC தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கு தேர்வர்கள் இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. இதற்கான காரணம் இந்த தேர்வுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி. கூடுதலாக, தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒரே ஒரு எழுத்து தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் உடனடி வேலை. மேலும் சொந்த மாவட்டத்திற்குள் வேலை கிடைக்க வாய்ப்பு. இந்த நிலையில் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான அறிவிப்பு, TNPSC வருடாந்திர அட்டவணைப்படி செப்டம்பர் மாதம் வெளியாக வேண்டும். ஆனால் தற்போது வரை அறிவிப்பு வெளியாகததால், அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், தேர்வு டிசம்பர் இறுதி வாரம் அல்லது ஜனவரியில் நடத்தப்படலாம் என தெரிகிறது. எனவே இந்த தேர்வு குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இப்போது பார்ப்போம்.
என்னென்ன பதவிகள்?
TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, 1. இளநிலை உதவியாளர் (Junior Assistant) 2. தட்டச்சர் (Typist) 3.சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist) 4. கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer) 5. வரித் தண்டலர் (Bill Collector) 6. நில அளவர் (Field Surveyor) 7. வரைவாளர் (Draftsman)
கல்வித் தகுதி
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதுமானது. தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் தேர்ச்சி பெற்றவர்கள் அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். எனவே அவர்களுக்கு கூடுதலான வாய்ப்பு உள்ளது. வயதுத் தகுதி இத்தேர்விற்க்கான வயது தகுதி கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு. அதுவே இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 18 வயது முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரை சலுகை உண்டு. மேலும் அனைத்து பதவிகளுக்கும் மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அதாவது பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை
இந்த பதவிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மொத்தம் 200 வினாக்கள் கொண்டது. அவற்றிற்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் (ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள்) கிடைக்கும். இத்தேர்வில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அவற்றில் 100 வினாக்கள் தமிழ் (அ) ஆங்கிலம் பாட பகுதியிலிருந்து கேட்கப்படும். தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும் 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75-பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.
Tuesday, March 30, 2021
Thirukkural - திருக்குறள்
திருக்குறள்
திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள்
1. பரிமேலழகர் (10-வது உரையாசிரியர்)
2. தருமர்
3. மணக்குடவர்(முதன் முதலில் உரை எழுதியவர்)
4. தாமத்தர்
5. பரிதி
6. திருமலையர்
7. மல்லர்
8. கவிப்பெருமாள்
9. காளிங்கர்
10.நச்சர்
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
-
இந்திய அரசியலமைப்பின் முகவுரை முகவுரை என்பது இயற்றப்பட்ட சட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும். முகவுரை அரசியலமைப்பின் த...
-
IBSF சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி பட்டம் வென்றுள்ளார் சாம்பியன்ஷிப் போட்டியில் 150 – UP பிரிவில் இந்திய வீரரான பங்...
-
பெலராஸ் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் மானவ் தக்கார் வெண்கலம் வென்றார். பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில் இந்தப் போட்டிகள் ந...

