Monday, December 10, 2018
பன்றிக் காய்ச்சல் உயிரிழப்பு: 6-ஆவது இடத்தில் தமிழகம்
மிஸ் வேர்ல்டு 2018 போட்டியில் மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன் பட்டம் வென்றார்
சீனாவின் சான்யா நகரில் 68வது உலக அழகி போட்டி இன்று நடைபெற்றது. இதில் மிஸ் வேர்ல்டு 2018 போட்டி நடந்தது. இதில், மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018-ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார். கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி கீரீடத்தை சூட்டினார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு 181 என்ற ஹெல்ப்லைன் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு 181 என்ற ஹெல்ப்லைன் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் இந்த சேவை செயல்பாட்டில் உள்ள நிலையில், தமிழகத்திலும் இந்த சேவையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 இலவச தொலைபேசி எண்ணுக்கான மையம் அமைக்கப்பட்டது.
பரிசோதனை முறையில் இந்த மையம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ‘181’ இலவச தொலைபேசி எண் வசதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்தார். அதற்கான கால்சென்டரையும் தொடங்கி வைத்தார்.
கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது
கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது
பிரபல செய்தி நிறுவனமான லோக் மட் செய்தி நிறுவனம் சார்பில், நாடாளுமன்ற விருதுகள் 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்பட உள்ளது. வரும் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இந்த விருதுகளை வழங்க உள்ளார்.
2018-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற சிறந்த பெண் உறுப்பினருக்கான விருது திமுக எம்.பி. கனிமொழிக்கு வழங்கப்படுகிறது. ''நாடாளுமன்றத்தில் கடந்த பத்தாண்டுகளாக கனிமொழி மகத்தான பங்காற்றியுள்ளார்.
ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்துள்ளார். எனவே மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழிக்கு 2018-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற சிறந்த பெண் உறுப்பினருக்கான விருது வழங்கப்பட உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை டெல்லியில் 13-ம் தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்
2018 ஆண்டு உணவுக்கான குறியீட்டில் இந்தியாவுக்கு 33 வது இடம்
2018 ஆண்டு உணவுக்கான குறியீட்டில் இந்தியாவுக்கு 33 வது இடம்
பொருளாதார நுண்ணறிவு பிரிவு மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான பரில்லா மையத்தால் வெளியிடப்பட்ட, 2018க்கான உணவுக்கான குறியீட்டில் (Food Sustainability Index), இந்தியாவானது 67 நாடுகளில் 33வது இடத்தைப் பிடித்துள்ளது.
பிரான்ஸ் நாடானது முதலிடத்தில் உள்ளது. இக்குறியீடு, மிலனில் நடைபெற்ற BCFN உணவு மன்றத்தில் வெளியிடப்பட்டது.
முக அடையாளம் மூலம் மாணவர்களின் வருகை பதிவு
முக அடையாளம் மூலம் மாணவர்களின் வருகை பதிவு
முக அடையாளம் மூலம் மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் நவீன தொழில்நுட்ப முறை இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிநவீன வருகை பதிவு திட்டம் SMART ATTENDANCE SCHEME என்று பெயரிடப்பட்டுள்ளது.
உலக மனித உரிமைகள் நாள்: 10-12-1950
ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.
Saturday, December 8, 2018
மாற்று திறனாளிகள் கொண்டு டிவி சேனல் தொடக்கம்
குஜராத்தின் சூரத் நகரில் முழுக்க முழுக்க மாற்று திறனாளிகளை கொண்டு இயக்கப்படும் டிவி சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
தென் குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேனல் விரைவில் இந்தியா முழுவதும் ஒலிப்பரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதன் இயக்குனர் பத்மஸ்ரீ கனு டெய்லர் தெரிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் அவர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுத்து ஆறு மாத பயிற்சி அளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டிவி சேனலின் இந்த புது முயற்சி கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சார்க் அமைப்பு உருவான நாள்: 8-12-1985
இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூடான் நாடுகள் 1985-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2007-ல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14-வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.
உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியாவுக்கு 4வது இடம்
உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றுவது பற்றி குளோபல் கார்பன் புராஜெக்ட் என்ற பெயரிலான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில், 2017ம் வருடத்தில் சீனா (27 சதவீதம்), அமெரிக்கா (15 சதவீதம்), ஐரோப்பிய யூனியன் (10 சதவீதம்) மற்றும் இந்தியா (7 சதவீதம்) ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன.
இந்த ஆய்வில் முதல் 10 இடங்களில் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, ஈரான், சவூதி அரேபியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ளன என தெரிய வந்துள்ளது.
Friday, December 7, 2018
வேகமாக வளரும் உலக நகரங்களின் பட்டியலில் திருப்பூர், திருச்சி
வேகமாக வளர்ந்து வரும் உலகின் டாப் 10 நகரங்களின் பட்டியலில் தமிழகத்தின் திருப்பூர், திருச்சி, சென்னை ஆகியன இடம்பெற்றுள்ளன.
ஆக்ஸ்போர்டு பல்கலை., பொருளாதார ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் உலக பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2019 - 2023 ம் ஆண்டுகளில் வேகமாக வளரும் இந்திய நகரங்களின் டாப் 10 பட்டியலில் சூரத் முதல் இடத்திலும், ஆக்ரா 2வது இடத்திலும் உள்ளன.
3வது இடத்தில் பெங்களூரு, 4வது இடத்தில் ஐதராபாத், 5வது இடத்தில் நாக்பூர், 6வது இடத்தில் திருப்பூர், 7 வது இடத்தில் ராஜ்கோட், 8 வது இடத்தில் திருச்சி, 9 வது இடத்தில் சென்னை, 10 வது இடத்தில் விஜயவாடா உள்ளது.
உலக அளவில் ஆப்ரிக்காவின் தர் இஸ் சலாம் நகரம் உள்ளது.
மக்கள் தொகை அதிகரித்து வரும் டாப் 10 நகரங்களின் பட்டியலில் மும்பை இடம்பிடித்துள்ளது.
Wednesday, December 5, 2018
உத்திரப்பிரதேசத்தின் பாதோஹி மாவட்டத்திற்கு சிறந்த ஏற்றுமதி குறியீடு
உத்திரப்பிரதேசத்தின் பாதோஹி மாவட்டத்திற்கு கம்பளம் மற்றும் இதர தரை விரிப்பான் பொருட்கள் பிரிவில் ‘சிறந்த ஏற்றுமதி’ குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகுதி நிலையானது வர்த்தக அமைச்சகத்தின் கீழ் உள்ள வெளிநாட்டு வர்த்தகத்தின் பொது இயக்குநரகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
கங்கை ஆற்றின் அருகில் அமைந்துள்ள இந்த பாதோஹி நகரமானது இந்த குறியீட்டைப் பெற்ற 37-வது நகரமாகும்.
2019 ஆண்டுக்கான 6-வது இந்திய திறன்கள் அறிக்கை
6-வது பதிப்பு மற்றும் 2019க்கான இந்திய திறன்கள் அறிக்கையின்படி அதிகபட்ச வேலைவாய்ப்பு திறன்களுடன், ஆந்திரப் பிரதேசமானது, முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புத் திறன்களுடன் அதிகப்படியாக வேலையளிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசமும் ஒன்றாகும். பெண்களின் வேலைவாய்ப்புத் திறன் 46% மற்றும் ஆண்களின் வேலைவாய்ப்புத் திறன் 48% ஆகியவற்றுடன் மொத்த வேலைவாய்ப்புத் திறன் 47% ஆக உயர்ந்துள்ளது.
50-வது நுரையீரல் ஆரோக்கியத்திற்கான ஐக்கிய உலக மாநாடு
4 நாள்களுக்கு நடைபெறும் நுரையீரல் ஆரோக்கியம் மீதான 50-வது ஒன்றிய சர்வதேச மாநாடானது, அடுத்த வருடம் ஐதராபாத்தில் நடைபெறும் என்று காசநோய் மற்றும் நுரையீரல் நோய்க்கு எதிரான சர்வதேச ஒன்றியமானது அறிவித்துள்ளது.
மாநாட்டின் கருத்துரு : “அவசர நிலையின் முடிவு : அறிவியல், தலைமைத்துவம், நடவடிக்கை” (Ending the Emergency: Science, Leadership, Action)
தமிழகத்தில் 181 என்ற, இலவச தொலைபேசி எண் அறிமுகம்
பெண்கள் சார்ந்த வன்கொடுமைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகத்தில், '181' என்ற, இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில், பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், 181 என்ற, இலவச தொலைபேசி எண்ணை, நான்காண்டுகளுக்கு முன், மத்திய அரசு அறிமுகம் செய்தது.
சில வட மாநிலங்களில் மட்டுமே, இந்த சேவை செயல்பாட்டில் உள்ளது.
தற்போது, இந்த சேவை, தமிழகத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஐ.நா மாநாடு
பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஐ.நா மாநாடு, போலந்தில் தொடங்கியது.
இது தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க, ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு முன்பு, பாரீசில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த, 200 நாடுகளின் பிரதிநிதிகள் போலந்தில் உள்ள கடோவைஸ் நகரில் ஒன்று கூடியுள்ளனர்.
வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில், பருவநிலை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தேசிய ஜூனியர் தடகளம் தமிழகம் 2வது இடம்
தேசிய ஜூனியர் தடகள போட்டியில், தமிழக அணி 4 தங்கம் உட்பட 14 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்தது. வெங்கடேஸ்வரா பல்கலை.
தாரகராமா விளையாட்டு மைதானத்தில் நடந்த இத்தொடரில், 309 வீரர், வீராங்கனைகள் அடங்கிய தமிழக அணி களமிறங்கியது.
மத்தியப்பிரதேச அணி 7 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலத்துடன் முதலிடம் பிடித்தது. தமிழகம் 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 2வது இடம் பெற்றது.
3 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலத்துடன் உத்தரபிரதேசம் 3வது இடமும், 2 தங்கம், 1 வெண்கலத்துடன் ஆந்திரா 8வது இடமும் பிடித்தன.
Monday, December 3, 2018
முதல் முறையாக 2022-ம் ஆண்டு இந்தியாவில் ஜி-20 உச்சி மாநாடு - பிரதமர் மோடி அறிவிப்பு
ஜி-20 உச்சி மாநாடு முதல் முறையாக இந்தியாவில் 2022-ம் ஆண்டு நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.
உலக அளவில் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கும் முதல் 20 நாடுகள் இணைந்து ‘ஜி-20’ என்ற பெயரில் கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றன.
இந்தியாவும் அங்கம் வகிக்கும் இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் ஏதாவது ஒரு உறுப்பு நாட்டில் நடந்து வருகிறது.
உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 90 சதவீதத்தையும், 80 சதவீத வர்த்தகத்தையும் கொண்டிருக்கும் இந்த நாடுகள், உலக மக்கள் தொகையில் 3-ல் இரண்டு பங்கையும், ஒட்டுமொத்த நிலப்பரப்பில் சுமார் பாதியளவையும் கொண்டிருக்கின்றன. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை இந்தியா இதுவரை நடத்தியது இல்லை. ஆனால் 2022-ம் ஆண்டு நடைபெறும் மாநாட்டை இந்தியா நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டில், இந்த மாநாட்டை நடத்துவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.
அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற 13-வது ஜி-20 மாநாட்டின் இறுதி நிகழ்வில் பேசும்போது, பிரதமர் மோடி இந்த தகவலை வெளியிட்டார். இந்த வாய்ப்பை விட்டு கொடுத்ததற்காக இத்தாலிக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.
இந்தியாவில் இணைய தள வேகத்தை அதிகரிக்க GSAT 11 செயற்கைகோள்
இந்தியாவில் இணைய தள வேகத்தை அதிகரிக்கக் கூடியதும், இதுவரை இல்லாத அதிக எடை கொண்டதுமான செயற்கைக்கோளை இஸ்ரோ நாளை மறுநாள் விண்ணில் செலுத்தவுள்ளது.
பிரெஞ்சு கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 5.9 டன் எடை கொண்ட GSAT 11 என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.
தேசிய சீனியர் மல்யுத்தம்: வினேஷ், சாக்ஷிக்கு தங்கம்
தேசிய சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நட்சத்திர வீராங்கனைகள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் ஆகியோர் தங்கம் வென்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் டாடா மோட்டார்ஸ் தேசிய சீனியர் சாம்பியன் ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.
62 கிலோ எடைப்பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் 11-0 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியாணாவின் பூனாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
65 கிலோ பிரிவில் அனிதா 4-0 என்ற புள்ளிக்கணக்கில் கீதிகா ஜாக்கரை வென்று தங்கம் வென்றார். இதில் ரித்து மாலிக் வெண்கலம் வென்றார்.
தென் ஆசிய பிராந்திய இளைஞர் சமாதான மாநாடு
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷண் சமிதி போன்ற அமைப்புகள் யுனெஸ்கோவுடன் (UNESCO) இணைந்து, 3 நாள் “தென் ஆசிய பிராந்திய இளைஞர் சமாதான மாநாட்டை (South Asia Regional Youth Peace Conference) “புதுடெல்லியில்” நடத்த உள்ளது.
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் தொடக்கத்தை குறிக்க இந்த மாநாடு நடத்த உள்ளது.
சௌபாக்யா – பிரதான் மந்திரி சகஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா
கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட “சௌபாக்யா – பிரதான் மந்திரி சகஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா” என்ற திட்டத்தின் கீழ், நாட்டில் மத்திய பிரதேசம், திரிபுரா, பீகார், ஜம்மு & காஷ்மீர், மிசோரம், சிக்கிம், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்கள் 100 சதவிகிதம் மின்சார இணைப்பை பெற்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
குறிப்பு சௌபாக்கிய திட்டம் என்பது நாட்டின் அனைத்து இடங்களிலும் மார்ச் – 2019 ஆம் ஆண்டிற்குள் மின்சார இணைப்பை வழங்குவதற்கான திட்டம் ஆகும்.
நாகலாந்தில் 19-வது “ஹாரன்பில்” திருவிழா
நாகலாந்தின் வளமான கலாச்சாரம் மற்றும் கைத்தொழில்கள், விளையாட்டுகள், உணவு வகைகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதற்கான, 19-வது “ஹாரன்பில்” திருவிழா நாகலாந்து மாநில தலைவர் ஹோகிமா அருகில் உள்ள கிஸ்மா கிராமத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்துள்ளார்.
இத்திருவிழாவில் கௌரவ விருந்தாளியாக இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் “கென்னத் ஜஸ்டர்” அழைக்கப்பட்டுள்ளார்.
Sunday, December 2, 2018
உலகின் முதலாவது நிலத்தடி நீர்மட்டத்திற்கு கீழ் அமைந்த ஆடம்பர தங்கும் விடுதி
*உலகின் முதலாவது நிலத்தடி நீர்மட்டத்திற்கு கீழ் அமைந்த ஆடம்பர தங்கும் விடுதி*
உலகின் முதலாவது நிலத்தடி நீர்மட்டத்திற்கு கீழ் அமைந்த ஆடம்பர தங்கும் விடுதியான இண்டர்கான்டினென்டல் ஷாங்காய் வொண்டர்லேண்ட் விடுதியானது சீனாவின் ஷாங்காய் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் சாங்கியாங் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது.
UNICEF -ஆனது குழந்தைகளின் உரிமைகளுக்காக போராட அசாம் பிரபல பாடகியை நியமனம் செய்துள்ளது
*UNICEF -ஆனது குழந்தைகளின் உரிமைகளுக்காக போராட அசாம் பிரபல பாடகியை நியமனம் செய்துள்ளது*
ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகளுக்கான அவசர நிதியமானது (UNICEF – United Nations International Children’s Emergency Fund) குழந்தைகளின் உரிமைகளுக்காக போராட வடகிழக்குப் பிராந்தியத்திற்காக முதல் இளைஞர் பரப்புனராக அசாம் பிரபல பாடகியான நஹீத் அப்ரின் என்பவரை நியமித்துள்ளது.
தீனதயாள் அந்த்யோதயா திட்டத்திற்காக பைசா என்ற மின்னணு தளம் தொடக்கம்
தீனதயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் (DAY – NULM/Deendayal Antyodaya Yojana. National Urban Livelihoods Mission) கடன்களை விரைவாக செயலாக்கம் செய்வதற்காக, வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகமானது, மலிவான கடன் வசதி மற்றும் வட்டி உதவித் தொகை அணுகலுக்காக (PAiSA) பைசா என்ற மின்னணு தளத்தை புது டெல்லியில் நடைபெற்ற மாநகராட்சி நிதி மற்றும் நகர்புற திட்டமிடல் மீதான தேசிய பட்டறையின் போது தொடங்கப்பட்டது.
PAiSA – Portal for Affordable Credit and Interest Subvention Access
நேரடி வரிச் சட்டத்தை வரைவு செய்யும் பணிக்குழுவின் தலைவராக அகிலேஷ் ரஞ்சன் நியமனம்
மத்திய நேரடி வரிகளுக்கான ஆணையத்தின் உறுப்பினரான அகிலேஷ் ரஞ்சனை புதிய நேரடி வரிச் சட்டத்தை வரைவு செய்யும் பணிக்குழுவின் தலைவராக மத்திய அமைச்சகம் நியமித்துள்ளது.
இவர் அரவிந்த் மோடிக்கும் பதிலாக பதவியேற்க உள்ளார்.
இப்பணிக் குழுவானது, 1961-ன் வருமான வரிச் சட்டத்தை, மதிப்பாய்வு செய்யும் நாட்டின் பொருளாதார தேவைகளுடன் ஒத்திசையக் கூடிய புதிய நேர்முக வரிச் சட்டத்தை வரைவு செய்வதற்காக நவம்பர் 2017ல் அமைக்கப்பட்டது.
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த தூண் தென்முடியனூரில் கண்டுபிடிப்பு
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரம சோழன் ஆட்சிக் காலத்தில், பெண்ணை வடகரை மேற்கோவலூர் நாட்டு இலச்சியமுடையான் உழியன் மாதன் என்பவர் சோழாந்தகப் பல்லவராயன் வடுகன் ஆளவந்தான் நினைவாக, அமைக்கப்பட்ட தூம்பானது, திருவண்ணாமலை அருகே தென்முடியனூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா விமானப்படைகள் நாளை (03.12.2018) முதல் 12 நாள் கூட்டுப் பயிற்சி
அமெரிக்காவின் முதன்மையான ராணுவ கூட்டாளியாக இந்தியாவை கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இந்திய விமானப்படை வீரர்கள் நாளை முதல் 12 நாட்களுக்குமேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள காலய்குன்டா மற்றும் பனாகர் விமானப்படைத் தளங்களில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
இருநாடுகளுக்கு இடையில் நான்காவது முறையாக நடைபெறும் இந்த பயிற்சிக்காக அமெரிக்காவில் இருந்து F15 C/D and C-130 ரகப்போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளன.
இந்தியாவின் சார்பில் Su-30 MKI, Jaguar, Mirage 2000, C-130J உள்ளிட்ட போர் விமானங்கள் பங்கேற்கும் இந்த கூட்டுப்போர் பயிற்சிக்கு எக்ஸ் கோப் இந்தியா (Ex Cope India-18) என பெயரிடப்பட்டுள்ளது.
Saturday, December 1, 2018
தேசிய துப்பாக்கி சுடும் போட்டி
தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன் போட்டியில் நட்சத்திர வீராங்கனைகள் மானு பாக்கர், ஹீனா சித்து ஆகியோரை பின்னுக்கு தள்ளி, 13 வயது இஷா சிங் மூன்று தங்கம் வென்றுள்ளார்.
திருவனந்தபுரத்தில் 62-ஆவது தேசிய துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன
இந்த போட்டியில் 10 மீ ஏர்பிஸ்டல் பிரிவு மகளிர், யூத் மகளிர், ஜூனியர் மகளிர் போட்டிகளில் தெலங்கானாவைச் சேர்ந்த, இளம் வீராங்கனை இஷா சிங் முறையே ஹீனா சித்து, மானு பாக்கர், ஸ்வேதா சிங் ஆகியோரை வென்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் -1
உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988-ல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயிட்ஸ்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம் முதல் இரண்டு வருடங்களில்,எய்ட்ஸ் தினத்திற்கான கருப்பொருள் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரையே சுற்றி இருந்தது. எய்ட்சால் அவதியூருபவர்கள் மற்றும் ஹெட்ச்.ஐ.வியால் பாதிக்கப்படுபவர்கள் எல்லா வயதினருமே என்பதனால் இந்த கருப்பொருள்கள் பின்பு கடினமாக எதிர்க்கப்பட்டன.
2004-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் பிரசாரம் ஒரு சுதந்திர சங்கமாக மாறியது. ஒவ்வொரு வருடமும், போப்பரசர்கள் இரண்டாம் ஜான்பால் மற்றும் பதினாறாம் பெனெடிக்ட் உலக எய்ட்ஸ் தினத்தன்று நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடுவார்கள்
தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் (NSDC) தலைவர்
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் (NSDC) தலைவராக திரு ஏ எம் நாயக் (Anil Manibhai Naik) என்பவரை நியமித்துள்ளது.
இந்தியாவின் பெரும் பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் தலைவராக ஏ.எம் நாயக் உள்ளார்.
NSDC – National Skill Development Corporation
சார்க் (SAARC)உச்சி மாநாடு- 2018
தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சார்க் உச்சி மாநாடு 2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ளும்படி பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. கடைசியாக, 2014-இல் SAARC மாநாடு நேபாளத்தின் காத்மண்டு நகரில் நடந்தது.
குறிப்பு சார்க் (SAARC- South Asian Association for Regional cooperation) தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (SAARC), டிசம்பர் 8, 1985-இல் ஏற்படுத்தப்பட்டது.
தெற்காசியாவின் 8 நாடுகள் (இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, மாலத்தீவு, பூடான்) உறுப்பினர்களாக உள்ளன.
2007ல் ஆப்கானிஸ்தான் 8-வது உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு லோக் ஆயூக்தா விதிகள் – 2018
லோக்பால் மற்றும் லோக் ஆயூக்தா சட்டம் 2013-ன் 63-வது பிரிவுப்படி, ஒவ்வொரு மாநிலமும் மற்றும் யூனியன் பிரதேசமும் சட்டம் இயற்றி லோக் ஆயூக்தா நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்.
அதன்படி, தமிழக அரசானது, அரசியல் விதிகள், அதிகாரிகளின் ஊழல் புகார்களை விசாரிக்கும் “லோக் ஆயூக்தா” அமைப்பதற்கான பணியை தொடங்கியுள்ளது.
தமிழக அரசு சார்பில் “தமிழ்நாடு லோக் ஆயூக்தா விதிகள் – 2018” என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Wednesday, November 28, 2018
கிராமப்புற பெண்களுக்கு அதிகாரமளிக்கும் “சஷாக்ட் மகிளா” திட்டம்
மகளிர் குழுக்கள் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிற்கு இடையே ஒரு இடைமுகத்தை அளிப்பதன் மூலம் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரமளிக்க வழி செய்வதற்காக, “சஷாக்ட் மகிளா” என்னும் திட்டத்தை இமாச்சலப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் இமாச்சலப் பிரதேச அரசு ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை பணமில்லா மருத்துவ சேவையை அளிக்கும் இமாச்சல் சுகாதார திட்டத்தை (Himachal Health Care Scheme – HIMCARE) செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
2018 ஆம் ஆண்டின் சர் ஹென்றி காட்டன் ரூக்கியை வென்ற முதலாவது இந்தியர்
2018 ஆம் ஆண்டின் சர் ஹென்றி காட்டன் ரூக்கியை வென்ற முதலாவது இந்தியர்
துபாயில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான டிபி உலக சாம்பியன்ஷிப் போட்டியில், சர் ஹென்றி காட்டன் ரூக்கியை வென்ற, முதலாவது இந்தியராக சண்டிகரைச் சேர்ந்த, இளம் இந்திய குழிப் பந்தாட்டக்காரரான, சுபன்கர் சர்மா உருவெடுத்துள்ளார்.
ஐரோப்பாவில் நடைபெற்ற போட்டியில் இந்த விருதை வென்ற முதலாவது இந்தியர் இவராவார்.
ஆசியாவில் நடைபெற்ற போட்டிகளில் ஆண்டின் ரூக்கி விருதை அர்ஜுன் அட்வால் (1995), சிவ் கபூர் (2005) மற்றும் சி. முனியப்பன் (2009) ஆகியோர் வென்று உள்ளனர்.
விங்சூட் முறையில் விமானத்தில் இருந்து குதித்து பெண் சாதனை
உலகிலேயே முதன்முறையாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த, ஹீதர் ஸ்வான் (Heather Swan) என்ற பெண் விங்சூட் முறையில், வானிலிருந்து குதித்து சாதனை படைத்துள்ளார்.
விமானம் மூலம் 12 ஆயிரம் அடி உயரத்திற்கு சென்ற அவர் தனது கணவருடன் விமானத்தில் இருந்து குதித்தார். அப்போது அவர் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தார்.
இதன் மூலம் விங்சூட் முறையில் முதலில் பறந்த பெண் என்ற பெருமையை ஸ்வான் பெற்றுள்ளார்.
-
இந்திய அரசியலமைப்பின் முகவுரை முகவுரை என்பது இயற்றப்பட்ட சட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும். முகவுரை அரசியலமைப்பின் த...
-
IBSF சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி பட்டம் வென்றுள்ளார் சாம்பியன்ஷிப் போட்டியில் 150 – UP பிரிவில் இந்திய வீரரான பங்...
-
பெலராஸ் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் மானவ் தக்கார் வெண்கலம் வென்றார். பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில் இந்தப் போட்டிகள் ந...



