Tuesday, October 14, 2025

ஈ. வே. ரா -பெரியார் அவர்கள்

ஈ. வே. ரா -பெரியார்  
விரிவாக்கம்- ஈரோடு வெங்கடப்ப நாயக்கர் ராமசாமி 

17 செப்டம்பர் 1879

பெற்றோர்: வேங்கடப்ப நாயக்கர் -சின்னதாயி   


சிறப்பு பெயர்:


* சிறைப் பறவை 
* போர் முரசு 
*சுயமரியாதைச் சுடர்
* புத்துலக தொலைநோக்காளர் 
* பகுத்தறிவு பகலவன் *வெண்தாடி வேந்தன்
* தமிழ்நாட்டின் ருசோ 
* வைக்கம் வீரர்
* ஈரோட்டில் சிங்கம் 
* சமுதாய சிற்பி


சகோதரிகள்- கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி

1898 திருமணம்- நாகம்மை

வளர்ப்பு மகள்- மணியம்மை






1904- காசி பயணம்

1909 தனது தங்கை மகளுக்கு விதவை மறுமணம் செய்து வைத்தார் 


17 செப்டம்பர் 1917 மெட்ராஸ் மாகாண சங்கத் துணைத் தலைவர்

1917 ஈரோடு நகர சபை தலைவர் 

  1919- வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டம் (ஈரோடு)

  1921- 500 தென்னை மரங்களை வெட்டினார்  ( கள்ளுக்கடை மறியல் போராட்டம் ) 

1923- சென்னை மாநில காங்கிரஸ் தலைவர் 

1924 மார்ச் 30- வைக்கம் போராட்டம் ( மகாதேவர் கோவில் ) சார்ஜ் ஜோசப் மற்றும் கேசவ மேனனின் அழைப்பின் காரணமாக...

* இதில் வெற்றி பெற்றதற்காக வைக்கம் வீரர் என்று பெரியாருக்கு திரு. வி. கா நவசக்தி இதழில் கொடுத்தார்


1923- சேரமன்மாதேவியில் தமிழ் குருகுல வித்யாலயா என் அமைப்பை வ. வே. சு. ஐயர் மற்றும் பரத்வாஜ் நடத்தி வந்தனர். இங்கு பின்பற்றப்பட்ட 2 பந்தி முறையை பெரியார் எதிர்த்தார்

1924-திருவண்ணாமலை காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்

1925- திருவிக தலைமையில் நடைபெற்ற காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார் பெரியார். ( வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்க மறுத்ததால்)

1925 சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்

1929- சுய மரியாதை இயக்கத்தில் முதல் மாநாடு - WB சௌந்தர பாண்டியன் தலைமையில்  நடைபெற்றது. (செங்கல்பட்டு)  

1930- ஜெயகர் தலைமையில் இரண்டாவது மாநாடு நடைபெற்றது.( ஈரோடு)

1931-RK சண்முகம் தலைமையில் விருதுநகரில் மூன்றாவது மாநாடு நடைபெற்றது 

1930- கர்ப்ப ஆட்சி என்ற நூலை வெளியிட்டார் ( குடும்ப கட்டுப்பாடு பற்றி)  

1932- சிங்காரவேலருடன் இணைந்து ஈரோடு சமதர்ம திட்டத்தை தொடங்கினார்   

1936- ANNIHILATION OF CASTE  என்னும் நூலை சாதி ஒழிப்பு என்று மொழிபெயர்த்தார் 

1937 ராஜாஜி கொண்டு வந்த ஹிந்தி திணிப்பை  " திராவிட இனத்தை அடிமைப்படுத்த வரும் இந்தி ஆதிக்கத்தை முறியடித்து அதனை ஒழிக்க வேண்டும் என்றார் " 

1938 நவம்பர் 13- பெரியார் பட்டம் வழங்கப்பட்டது ( தர்மாம்பாள்.. தலைவர்:நீலாம்பிக்கை)           

1938 பெரியார் சிறையில் இருந்த போது நீதி கட்சியின் தலைவர் ஆனார்

27-ஆகஸ்ட்  -1944 நீதிக்கட்சியின் பெயரை திராவிட கழகம் என்று மாற்றினார் 

1947 ஆகஸ்ட் 15- விடுதலை நாளை துக்க நாள் அல்லது இருண்டநாள் என்று அறிவித்தார். ( வெள்ளையர்களிடமிருந்து தப்பித்து பிராமணர்களிடம் மாட்டிக் கொண்டோம்  என்றார்) 

1933 மே 11- நாகம்மை இறப்பு.

1949 பெரியார் மணியம்மையை திருமணம் செய்து கொண்டார் 

15 ஆண்டுகளில் 23 முறை சிறை சென்றார். எனவே சிறைப்பறவை என அறியப்பட்டார்.

     



பெரியார் எதிர்த்தவை:

* இந்தி திணிப்பு
* தேவதாசி முறை
* குலக்கல்வி திட்டம்
* குழந்தை திருமணம்
* தீண்டாமை 
* மணக்கொடை
* கள் உண்ணுதல்  


பெரியார் ஆதரித்தவை:

* ஆலய நுழைவு
* கலப்புத் திருமணம் 
* பெண் கல்வி 
* விதவை மறுமணம்


பெண் விடுதலை சிந்தனையின் அடிப்படை: பெண் கல்வி,சொத்துரிமை 

பெண் விடுதலை சிந்தனைகள் அகற்றப்பட வேண்டியவை : குழந்தை திருமணம், மணக்கொடை& தேவதாசி முறை 


1954- புத்தரின் 2500 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள பெரியார் பர்மா சென்றார் 


பெரியாரை "தமிழ்நாட்டின் ரூசோ " என்று அழைத்தவர்   - A. ராமசாமி    


கூற்றுகள்:

* அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் புதியனவற்றை ஏற்ற வேண்டும்.

* சமயம் என்பது உண்டு எனில் நீங்கள் மூடநம்பிக்கையை ஏற்றுக் கொள்கிறீர்கள் 

* பெண்களுக்கு நகையோ, உடைமையோ முக்கியமில்லை அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம்  
   
* கற்பு என்பது இருபாலர்க்கும் பொது

* தாய்மை என்பது பெண்களுக்கு பெருசுமை 

* தேசியவாதம் என்பது சுரண்டல்

* தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்று இளைஞர்களிடையே எண்ணம் வர வேண்டும்

  
சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாட்கள் -8600

13,12,000 கிலோமீட்டர் நடந்துள்ளார்

10,700- கூட்டங்களில் பங்கேற்றார் 
    
21,400 மணி நேரம் மேடை பேச்சி

இதழ்கள்:

*குடியரசு-1925
* ரிவோட் 1928
*புரட்சி 1933
*பகுத்தறிவு1934(எழுத்து சீர்திருத்தம்)
*விடுதலை1935  
* உண்மை-1970

* சித்திர புத்திரன் எனும் புனைபெயரில் எழுதினார் 

* தொண்டு செய்து பழுத்த பழம்- பாரதிதாசன்

*1971- மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு. சேலம்

இறப்பு:24 டிசம்பர் 1973
   
1978 அஞ்சல் தலை

Sunday, October 12, 2025

தேசிய அஞ்சல் வாரம் 2025 பற்றி கீழே அதற்கான முக்கிய விவரங்கள்

“தேசிய அஞ்சல் வாரம் 2025” பற்றி கீழே அதற்கான முக்கிய விவரங்கள் 
முக்கிய விவரங்கள்

இந்தியாவில் தேசிய அஞ்சல் வாரம் அஞ்சி (October) மாதத்தில் கொண்டாடப்படுகிறது. 

2025 ஆம் ஆண்டில், 9 — 15 அக்டோபர் 2025 நாட்களில் தேசிய அஞ்சல் வாரம் நடைபெறும் என்று அஞ்சல் நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், அக்டோபர் 10, 2025 அன்று தேசிய அஞ்சல் தினம் (National Postal Day) கொண்டாடப்படுகிறது. 

இந்த வாரத்தின் தொடக்க நாளான World Post Day அஞ்சி 9-ஆம் தேதி, உலக அஞ்சல் தினம் என கொண்டாடப்படுகிறது. 


நோக்கம் / முக்கியத்துவம்

தேசிய அஞ்சல் வாரம் மற்றும் அஞ்சல் தினத்தை கொண்டாடுவதற்கான காரணங்கள் பின்வருபவையாகும்:

1. அஞ்சல் சேவையின் பங்கு விழிப்புணர்வு
 அஞ்சல் துறை மக்கள், வணிகங்கள், მთავுடன் கொண்டாடிச் சேவைகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது. 


2. புது சேவைகள் / புதுமைகள் அறிமுகம்
 இந்த வாரத்தில் அஞ்சல் துறை புதிய சேவைகள், தொழில்நுட்ப மேம்பாடுகள், அனுசரணை வசதிகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. 


3. அஞ்சல் துறை ஊழியர்கள் / பங்குதாரர்களை கௌரவித்தல்
 அஞ்சல் வாரம் ஊழியர்களின் பணி, அர்ப்பணிப்பு என்பவற்றை பொதுமக்களுக்கு நினைவுகூர்ந்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.


4. பயன்பாட்டுக்கள் & வணிக செயலாக்கங்கள் ஊக்குவித்தல்
 அஞ்சல் சேவைகளின் வணிகச் செயலாக்கங்கள், பஸ்தவச் சேவைகள் (business posting, நிறுவன அஞ்சல் சேவைகள்) பற்றி விற்பனை / பயன்பாடு அதிகரிப்பது.


5. அஞ்சல்கலை (Philately) / அஞ்சல் பண்பாட்டு நிகழ்ச்சிகள்
 தபால்கஷகைகள், அஞ்சல்கலை நிகழ்ச்சிகள், அஞ்சல் அழகான் கட்டுரைகள், அஞ்சல் பண்பாட்டு செயல்பாடுகள்.



நாள் வாரியான செயல்பாடுகள் (முன்மாதிரி)

தேசிய அஞ்சல் வாரத்தில் அஞ்சல் துறை கொண்டாடக்கூடிய செயல்பாடுகளின் முன்மாதிரி பட்டியல்:

நாள் தலைப்பு / ஈடுபாடு செயல்பாடு எளிமையாக விளக்கம்

9 அக்டோபர் World Post Day உலக அஞ்சல் துறையின் முக்கியத்துவம் பற்றிய நிகழ்ச்சிகள், பொதுமக்களிடம் பேச்சுக்கள், ஊழியர் கூட்டம்
10 அக்டோபர் Banking / Financial Services Day அஞ்சல் துறையின் வங்கி / பொருளாதார சேவைகள் (India Post Payments Bank, சேமிப்பு கணக்குகள்) பற்றி முகவர்கள் முகாம் நடத்துதல்
11 அக்டோபர் PLI / RPLI Day அஞ்சல் வாழ்க்கை காப்பீடு (Postal Life Insurance) மற்றும் தொடர்புடைய சேவைகள் பற்றிய விழிப்புணர்வு
12 அக்டோபர் Philately Day அஞ்சல்கலை ஆர்வலர்களுக்கு நிகழ்ச்சிகள், அஞ்சல்கலை பதிப்புகளின் வெளியீடு
13 அக்டோபர் Business Development Day வணிக நிறுவனங்களுடனான சந்திப்பு, Institutional mailing / bulk mail சேவைகளை மேம்படுத்துதல்
14 அக்டோபர் Mail / Delivery Day அஞ்சல் விநியோக சேவையின் முக்கியத்துவம், அஞ்சல்கடத்தலின் வேலைகளை சிறப்புரையாற்றுதல்
15 அக்டோபர் Community Outreach / Closure நாள் வார நிகழ்ச்சிகளின் முடிவு, பொதுமக்களுக்கு அஞ்சல் சேவை விளக்கக்கூடுதல், பரிசு வழங்குதல்


(மேலான தினங்களும் செயல்பாடுகளும் அஞ்சல் துறை மாவட்ட / மண்டல அளவில் மாறலாம்.)


Monday, October 4, 2021

பால்வளத்துறையில் பணியிட மாறுதல், புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்

பால்வளத்துறையில் பணியிட மாறுதல், புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் – மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் எச்சரிக்கை. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசானது மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்தவகையில் பொது மக்களின் நலன் கருதி தமிழக அரசு அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்ததினால் ஆவின் பால் விற்பனை வெகு வேகமாக அதிகரித்துள்ளது. இதனால் 1 கோடி நுகர்வோர்கள் மற்றும் 450 நிறுவனங்கள் பயனடைந்துள்ளனர். புதிதாக ஏறக்குறைய 6 லட்சம் நுகர்வோர்கள் ஆவினில் இணைந்தமையால் ஆவினின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆவின் பால், பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்கவும், செயலிழந்த பால் உற்பத்தி சங்கங்களைப் புதுப்பிக்கவும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதன், அடிப்படையில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், மாவட்ட ஒன்றியங்கள் (ஆவின்) மற்றும் பால்வளத்துறையில் செயல்பாடுகளை துரிதமாக விரைந்து நடவடிக்கை எடுக்க நிருவாக காரணங்களுக்காக பணியிட மாறுதல்களுக்கு ஆணை வெளியிடப்படுகிறது. எனவே ஆவின், பால்வளத்துறையில் பணியிட மாறுதல் மற்றும் புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

Tuesday, September 21, 2021

விஏஓ தேர்வுக்கு தயாரா? உங்களுக்கான சில முக்கிய குறிப்புகள்! | #TNPSC

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வு; தேர்வர்களுக்கான முக்கிய தகவல்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கு தயாராகுபவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இப்போது பார்ப்போம். தமிழக இளைஞர்கள் பெரும்பாலானோரின் கனவு அரசு வேலை. அதிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு இளைஞர்களிடையே கடும் போட்டி இருக்கும். ஆண்டுதோறும் TNPSC தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கு தேர்வர்கள் இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. இதற்கான காரணம் இந்த தேர்வுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி. கூடுதலாக, தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒரே ஒரு எழுத்து தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் உடனடி வேலை. மேலும் சொந்த மாவட்டத்திற்குள் வேலை கிடைக்க வாய்ப்பு. இந்த நிலையில் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான அறிவிப்பு, TNPSC வருடாந்திர அட்டவணைப்படி செப்டம்பர் மாதம் வெளியாக வேண்டும். ஆனால் தற்போது வரை அறிவிப்பு வெளியாகததால், அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், தேர்வு டிசம்பர் இறுதி வாரம் அல்லது ஜனவரியில் நடத்தப்படலாம் என தெரிகிறது. எனவே இந்த தேர்வு குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இப்போது பார்ப்போம்.

என்னென்ன பதவிகள்?

TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை,
1. இளநிலை உதவியாளர் (Junior Assistant)
2. தட்டச்சர் (Typist)
3.சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)
4. கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer)
5. வரித் தண்டலர் (Bill Collector)
6. நில அளவர் (Field Surveyor) 7. வரைவாளர் (Draftsman)

கல்வித் தகுதி

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதுமானது. தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் தேர்ச்சி பெற்றவர்கள் அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். எனவே அவர்களுக்கு கூடுதலான வாய்ப்பு உள்ளது. வயதுத் தகுதி இத்தேர்விற்க்கான வயது தகுதி கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு. அதுவே இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 18 வயது முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரை சலுகை உண்டு. மேலும் அனைத்து பதவிகளுக்கும் மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அதாவது பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை

இந்த பதவிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மொத்தம் 200 வினாக்கள் கொண்டது. அவற்றிற்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் (ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள்) கிடைக்கும். இத்தேர்வில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அவற்றில் 100 வினாக்கள் தமிழ் (அ) ஆங்கிலம் பாட பகுதியிலிருந்து கேட்கப்படும். தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும் 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75-பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.

Tuesday, March 30, 2021

Thirukkural - திருக்குறள்

திருக்குறள் 

திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள்

1. பரிமேலழகர் (10-வது உரையாசிரியர்)
2. தருமர்
3. மணக்குடவர்(முதன் முதலில் உரை எழுதியவர்)
4. தாமத்தர்
5. பரிதி
6. திருமலையர்
7. மல்லர்
8. கவிப்பெருமாள்
9. காளிங்கர்
10.நச்சர்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812

திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133

திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330

திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை

திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி

திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங

திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்

திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Wednesday, August 19, 2020

Polity Previous Year Questions and Answers - Part 02 | TNPSC Group I, II, IV | PB Study Corner

Polity Previous Year Questions and Answers


Indian Polity Previous Year QA (01-20) - https://bit.ly/3fH0iGV



Indian Polity Previous Year QA (21-40) - https://bit.ly/2YfxQpK

Friday, August 14, 2020

Polity Previous Year Questions and Answers - Part 01 | TNPSC Group I, II, IV | PB Study Corner

Polity Previous Year Questions and Answers

Indian Polity Previous Year QA (01-20) - https://bit.ly/3fH0iGV



Indian Polity Previous Year QA (21-40) - https://bit.ly/2YfxQpK