Tuesday, September 21, 2021
Friday, November 16, 2018
மீனவர்களுக்காக புதிய மொபைல் ஆண்ட்ராய்டு ஆப்
மீனவர்களுக்காக, 'THOONDIL' என்ற, புதிய மொபைல் ஆப் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் அறிமுக விழா, சென்னையில் நடந்தது.
அமைச்சர் ஜெயகுமார், மீனவர்களுக்காக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வடிவமைக்கப்பட்ட, 'துாண்டில்' என்ற, புதிய மொபைல் ஆப் துவக்கப்பட்டு உள்ளது.
இந்த, 'மொபைல் ஆப்'பில், மீன் கிடைக்கும் இடம், மழை, புயல் முன்னெச்சரிக்கை குறித்து தகவல் பெறலாம்.
மீனவர்கள் கரையிலிருந்து எப்போது புறப்பட்டனர் என்பதையும், அவர்கள் கடலில் உள்ள இடத்தையும் அறிய முடியும். டவர் இல்லாத இடத்தில், படகு இருந்தால், படகு உள்ள இடத்தை, ஜி.பி.எஸ்., கருவி வழியாகவே கண்டறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Wednesday, November 14, 2018
அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய பெண் தேர்வு
அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின்போது இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.
நியோமி ராவ் தேர்வுக்கு அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபை தனது ஒப்புதலை வழங்க வேண்டும். அந்த சபையில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், நியோமி ராவ் தேர்வுக்கு ஒப்புதல் கிடைப்பது உறுதி.
நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ள கோர்ட்டில் இந்தியரான சீனிவாசன் ஏற்கனவே நீதிபதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC மீண்டும் புதிய அறிவித்த காலிபணியிடங்கள்
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Librarian பணிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Librarian
காலியிடங்கள்: 29
Librarian Grade-I in Industries and Commerce Department – 01
Librarian in Agriculture Department – 02
Film Librarian in Agriculture Department – 01
Librarian and Information Assistant Grade-I for Anna Centenary Library in Public Libraries Department – 05
Librarian and Information Assistant Grade-II for Anna Centenary Library in Public Libraries Department – 19
Librarian in Legislative Assembly Secretariat - 01
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் Library Science/Library and Information Science பிரிவில் இளநிலை/முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/SCA/ST/MBC/DC/BC(OBCM)/BCM/ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை.
விண்ணப்பக்கட்டணம்:
தேர்வு கட்டணம் ரூ.150ம், பதிவுக் கட்டணமாக ரூ.150ம் செலுத்த வேண்டும். ஏற்கனவே, TNPSC-ல் இணையத்தில் நிரந்தர பதிவு செய்திருப்பவர்கள் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.tnpsc.gov.inஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில்விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2018
விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 18.12.2018
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 23.02.2019
கூடுதல் தகவல்களுக்கு http://tnpsc.gov.in/notifications/2018_33_notyfn_Librarian.pdf
சிக்குன் குனியா நோயை குணப்படுத்த புளியங்கொட்டை - ஐஐடி பேராசிரியர்கள் கண்டுபிடிப்பு
சிக்குன் குனியா நோயை குணப்படுத்த புளியங்கொட்டை - ஐஐடி பேராசிரியர்கள் கண்டுபிடிப்பு
உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி.யில் பேராசிரியர்களாக பணியாற்றி வரும் ஷாய்லி தோமர், பிரவீந்திர குமார் ஆகியோர் புளியங்கொட்டையின் மூலம் சிக்குன் குனியா நோயை குணப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்து இருக்கின்றனர். இதற்காக அவர்கள் காப்புரிமை கோரியும் பதிவு செய்து உள்ளனர்.
புளியில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளன. இது ஒரு சிறந்த ஆயுர்வேத உணவும் ஆகும். புளியங்கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் லெக்டின் என்னும் ஒருவித புரதச்சத்து, நோய்க்கிருமிகள் உடலில் எளிதில் புகுந்து விடாத வகையில் உடலில் உள்ள உயிர் அணுக்களை பலப்படுத்துகிறது.
இதன் மூலம் சிக்குன் குனியா நோயை பரப்பும் வைரஸ்கள் 64 சதவீதம் வரை கட்டுப்படுத்தப்படுகிறது. தற்போது மருந்து சந்தையில் இந்த நோயை குணப்படுத்துவதற்கான போதிய மருந்துகள் கிடைக்காத நிலையில் லெக்டினை பயன்படுத்தி சிக்குன் குனியாவிற்கு சிகிச்சை அளிப்பதே சிறந்த வழிமுறையாக இருக்கும்.
-
இந்திய அரசியலமைப்பின் முகவுரை முகவுரை என்பது இயற்றப்பட்ட சட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும். முகவுரை அரசியலமைப்பின் த...
-
IBSF சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி பட்டம் வென்றுள்ளார் சாம்பியன்ஷிப் போட்டியில் 150 – UP பிரிவில் இந்திய வீரரான பங்...
-
பெலராஸ் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் மானவ் தக்கார் வெண்கலம் வென்றார். பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில் இந்தப் போட்டிகள் ந...
