Showing posts with label tnpsc current affairs. Show all posts
Showing posts with label tnpsc current affairs. Show all posts

Wednesday, November 14, 2018

மேற்கு வங்காளத்தின் பெயரை மாற்ற முடியாது - மத்திய அரசு

நடப்பு நிகழ்வுகள்-15.11.2018

மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்ற வேண்டும் என்று, அந்த மாநிலத்தை ஆளுகிற மம்தா பானர்ஜி அரசு விரும்புகிறது. இது தொடர்பான கோரிக்கையை, மாநில சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அதை மத்திய அரசு நிராகரித்து விட்டது. அண்டை நாடான வங்காள தேசத்தின் பெயரைப் போன்று இருப்பதால் பங்களா என்ற பெயர் நிராகரிக்கப்பட்டு அந்த கோப்பு, மாநில அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

சிக்குன் குனியா நோயை குணப்படுத்த புளியங்கொட்டை - ஐஐடி பேராசிரியர்கள் கண்டுபிடிப்பு

சிக்குன் குனியா நோயை குணப்படுத்த புளியங்கொட்டை - ஐஐடி பேராசிரியர்கள் கண்டுபிடிப்பு

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி.யில் பேராசிரியர்களாக பணியாற்றி வரும் ‌ஷாய்லி தோமர், பிரவீந்திர குமார் ஆகியோர் புளியங்கொட்டையின் மூலம் சிக்குன் குனியா நோயை குணப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்து இருக்கின்றனர். இதற்காக அவர்கள் காப்புரிமை கோரியும் பதிவு செய்து உள்ளனர்.

புளியில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளன. இது ஒரு சிறந்த ஆயுர்வேத உணவும் ஆகும். புளியங்கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் லெக்டின் என்னும் ஒருவித புரதச்சத்து, நோய்க்கிருமிகள் உடலில் எளிதில் புகுந்து விடாத வகையில் உடலில் உள்ள உயிர் அணுக்களை பலப்படுத்துகிறது.

இதன் மூலம் சிக்குன் குனியா நோயை பரப்பும் வைரஸ்கள் 64 சதவீதம் வரை கட்டுப்படுத்தப்படுகிறது. தற்போது மருந்து சந்தையில் இந்த நோயை குணப்படுத்துவதற்கான போதிய மருந்துகள் கிடைக்காத நிலையில் லெக்டினை பயன்படுத்தி சிக்குன் குனியாவிற்கு சிகிச்சை அளிப்பதே சிறந்த வழிமுறையாக இருக்கும்.