Thursday, November 22, 2018

Nov 19 - டேபிள் டென்னிஸ்: மானவுக்கு வெண்கலம்

பெலராஸ் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் மானவ் தக்கார் வெண்கலம் வென்றார்.

பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில் இந்தப் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் 21 வயதுக்குட்பட்டோர் ஆடவர் ஒற்றையர் பிரிவு, அரை இறுதியில் மானவ் தக்காரும், ரஷ்யா வின் டெனிஸ் இவோனினும் மோதினர்.

இதில் மானவ் தக்காரை 11-5, 4-11, 9-11 என்ற புள்ளிகள் கணக்கில் டெனிஸ் வெற்றி கண்டார்.

அரை இறுதியில் தோல்வி கண்டதையடுத்து மானவ் தக்காருக்கு வெண்கலம் கிடைத்தது.

No comments:

Post a Comment