இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்றுநாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் சென்றுள்ளார்.
வியட்நாம் சென்றுள்ள இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இருநாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமானது.
தலைநகர் ஹனோயில் இன்று வியட்நாம் அதிபர் ப்ஹு டிராங்-கை அவர் சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
பாதுகாப்புத்துறை, ஆக்கப்பூர்வமான பயன்பாடுகளுக்காக அணுசக்தியை பயன்படுத்துவது, விண்வெளித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பெட்ரோலிய கச்சா எண்ணைய், எரிவாயு, உள்கட்டமைப்பு துறை மேம்பாடு, வேளாண்மை மற்றும் புத்தாக்கம் தொடர்பான துறைகளில் இருநாடுகளும் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது.
தொலைத்தொடர்பு, கல்வி, வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கு இடையில் சில முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையொப்பமாகின.
No comments:
Post a Comment