Monday, December 10, 2018

உலக மனித உரிமைகள் நாள்: 10-12-1950


1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் ஒன்றுகூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும். 

Saturday, December 8, 2018

மாற்று திறனாளிகள் கொண்டு டிவி சேனல் தொடக்கம்

குஜராத்தின் சூரத் நகரில் முழுக்க முழுக்க மாற்று திறனாளிகளை கொண்டு இயக்கப்படும் டிவி சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

தென் குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேனல் விரைவில் இந்தியா முழுவதும் ஒலிப்பரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதன் இயக்குனர் பத்மஸ்ரீ கனு டெய்லர் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் அவர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுத்து ஆறு மாத பயிற்சி அளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டிவி சேனலின் இந்த புது முயற்சி கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  

சார்க் அமைப்பு உருவான நாள்: 8-12-1985


இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூடான் நாடுகள் 1985-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2007-ல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14-வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.     

உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியாவுக்கு 4வது இடம்

உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றுவது பற்றி குளோபல் கார்பன் புராஜெக்ட் என்ற பெயரிலான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில், 2017ம் வருடத்தில் சீனா (27 சதவீதம்), அமெரிக்கா (15 சதவீதம்), ஐரோப்பிய யூனியன் (10 சதவீதம்) மற்றும் இந்தியா (7 சதவீதம்) ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன.

இந்த ஆய்வில் முதல் 10 இடங்களில் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, ஈரான், சவூதி அரேபியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ளன என தெரிய வந்துள்ளது.  

Friday, December 7, 2018

வேகமாக வளரும் உலக நகரங்களின் பட்டியலில் திருப்பூர், திருச்சி

வேகமாக வளர்ந்து வரும் உலகின் டாப் 10 நகரங்களின் பட்டியலில் தமிழகத்தின் திருப்பூர், திருச்சி, சென்னை ஆகியன இடம்பெற்றுள்ளன. 

ஆக்ஸ்போர்டு பல்கலை., பொருளாதார ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் உலக பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

2019 - 2023 ம் ஆண்டுகளில் வேகமாக வளரும் இந்திய நகரங்களின் டாப் 10 பட்டியலில் சூரத் முதல் இடத்திலும், ஆக்ரா 2வது இடத்திலும் உள்ளன. 

3வது இடத்தில் பெங்களூரு, 4வது இடத்தில் ஐதராபாத், 5வது இடத்தில் நாக்பூர், 6வது இடத்தில் திருப்பூர், 7 வது இடத்தில் ராஜ்கோட், 8 வது இடத்தில் திருச்சி, 9 வது இடத்தில் சென்னை, 10 வது இடத்தில் விஜயவாடா உள்ளது. 

உலக அளவில் ஆப்ரிக்காவின் தர் இஸ் சலாம் நகரம் உள்ளது.

மக்கள் தொகை அதிகரித்து வரும் டாப் 10 நகரங்களின் பட்டியலில் மும்பை இடம்பிடித்துள்ளது.  

Wednesday, December 5, 2018

உத்திரப்பிரதேசத்தின் பாதோஹி மாவட்டத்திற்கு சிறந்த ஏற்றுமதி குறியீடு

உத்திரப்பிரதேசத்தின் பாதோஹி மாவட்டத்திற்கு கம்பளம் மற்றும் இதர தரை விரிப்பான் பொருட்கள் பிரிவில் ‘சிறந்த ஏற்றுமதி’ குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகுதி நிலையானது வர்த்தக அமைச்சகத்தின் கீழ் உள்ள வெளிநாட்டு வர்த்தகத்தின் பொது இயக்குநரகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

கங்கை ஆற்றின் அருகில் அமைந்துள்ள இந்த பாதோஹி நகரமானது இந்த குறியீட்டைப் பெற்ற 37-வது நகரமாகும்.  

2019 ஆண்டுக்கான 6-வது இந்திய திறன்கள் அறிக்கை

6-வது பதிப்பு மற்றும் 2019க்கான இந்திய திறன்கள் அறிக்கையின்படி அதிகபட்ச வேலைவாய்ப்பு திறன்களுடன், ஆந்திரப் பிரதேசமானது, முதலிடத்தைப் பிடித்துள்ளது.  அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புத் திறன்களுடன் அதிகப்படியாக வேலையளிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசமும் ஒன்றாகும். பெண்களின் வேலைவாய்ப்புத் திறன் 46% மற்றும் ஆண்களின் வேலைவாய்ப்புத் திறன் 48% ஆகியவற்றுடன் மொத்த வேலைவாய்ப்புத் திறன் 47% ஆக உயர்ந்துள்ளது.