Thursday, November 22, 2018

Nov 21 - இயக்குனர் மார்ட்டினுக்கு சாதனையாளர் விருது

உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர், மார்ட்டின் ஸ்கார்சசிக்கு நியுயார்க் நகரில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அவருக்கு மியூசியம் ஆப் மாடர்ன் ஆர்ட் என்ற அமைப்பின் சார்பில் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது.

இத்தாலிய வம்சாவளியினரான மார்ட்டின், வரலாற்று மற்றும் அறிவியல் புனைகதைகளை திரைப்படமாக்குவதில் சிறப்பு மிக்கவர். 

Nov 21 - அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய புதிய மொபைல் செயலி

அரசு பத்திரங்கள் சில்லரை முதலீட்டை ஈர்க்கவும், எளிமையாக்கும் வகையிலும் “என்எஸ்இ கோ பிட்” (NSE goBID) என்ற புதிய மொபைல் செயலியையும், இணைய தளத்தையும் தேசிய பங்குச்சந்தை அறிமுகம் செய்துள்ளது.

இதனை, செபி (SEBI) தலைவர் அஜய் தியாகி தொடங்கி வைத்துள்ளார்.

தேசிய பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகம் செய்யும் உறுப்பினர்கள் ஆகியோர் இத்தளத்தை எளிதாக அணுக முடியும்.

தேசிய பங்கு சந்தையின் இந்தப் புதிய தளத்திற்குக் கீழ் முதலீட்டாளர்களால் கருவூல பில்கள், இந்திய அரசின் பத்திரஙகளையும் முதன்மை சந்தையில் இருந்து வாங்க முடியும்.

வர்த்தகர்களுக்குத் தேவையான அனைத்துப் பரிவர்த்தனை சேவைகளும் இதில் கிடைக்கும் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சில்லறை வணிகர்களை நேரடியாக அரசு பத்திர திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்பிஐ அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.  

Nov 20 - ‘281 அண்ட் பியாண்ட் ’ கிரிக்கெட் வீரர் விவிஎஸ்.லட்சுமண் சுயசரிதை புத்தகம்

‘281 அண்ட் பியாண்ட் ’ கிரிக்கெட் வீரர் விவிஎஸ்.லட்சுமண் சுயசரிதை புத்தகம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ்.லட்சுமண், ‘281 அண்ட் பியாண்ட்’ என்ற தனது சுயசரிதைப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

இதில் தோனி, ஷேவாக், டிராவிட் எனத் தன்னுடன் விளையாடிய வீரர்கள்குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைக் கொடுத்துள்ளார்.

கிரிக்கெட்டில், தன் மறக்கமுடியாத தருணத்தையும் அசைபோட்டுள்ளார். புத்தகத்தின் பெயரில் இருந்தே சுவாரஸ்யங்கள் தொடங்குகின்றன.

அது,  ‘281 அண்ட் பியாண்ட்’ இந்த 281, - கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய லட்சுமண் குவித்த ஸ்கோர்.

Nov 20 - 2019 ஆம் ஆண்டின் இந்தியக் குடியரசு தினவிழாவில் தென்னாப்பிரிக்கா நாட்டின் அதிபர் “சிரில் ராமபோசர்” பங்கேற்பு

2019 ஆம் ஆண்டின் இந்தியக் குடியரசு தினவிழாவில் தென்னாப்பிரிக்கா நாட்டின் அதிபர் “சிரில் ராமபோசர்” பங்கேற்பு

2019 ஆம் ஆண்டின் இந்தியக் குடியரசு தினவிழா அணி வகுப்பில் “தலைமை விருந்தினராக (Chief Guest at the 2019 Republic Day Parade of India) தென்னாப்பிரிக்கா நாட்டின் அதிபர் “சிரில் ராமபோசர்” பங்கேற்க உள்ளார்.

தென்னாப்பிரிக்கா நாட்டில் இருந்து இந்திய குடியரசு தினவிழா அணி வகுப்பில் பங்கேற்கும் இரண்டாவது தலைவர் “சிரில் ராமபோசா” ஆவார்.

இதற்கு முன்னர், முன்னாள் தென்னாப்பிரிக்கா அதிபர் “நெல்சன் மண்டேலா” 1995 ஆம் ஆண்டு அணி வகுப்பில் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

Nov 20 - யுவ சஹாகர்”- மத்திய அரசின் புதிய திட்டம்

இளைஞர்களை கூட்டுறவு வணிக முயற்சிகளுக்கு ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட, தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (NCDC – National Cooperative Development Corporation) “யுவ சஹாகர்” (Yuva Sahakar) என்ற கூட்டுறவு தொழில் நிறுவன ஆதரவு மற்றும் புத்தாக்கத் திட்டத்தினை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

இந்த திட்டங்களுக்கான செலவினங்களில், SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற சிறப்பு பிரிவுகளில் உள்ளோருக்கு 80% நிதியும் மற்றவர்களுக்கு 70% நிதியும் அளிக்கப்படும்.

Nov 20 - 2018 ஆம் ஆண்டிற்கான “வாழ்நாள் சாதனையாளர் விருது”

2018 ஆம் ஆண்டிற்கான “வாழ்நாள் சாதனையாளர் விருது” டாக்டர் மார்த்தா ஃபரெல் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெண் சமத்துவம், பெண்களின் அதிகாரமளித்தல் மற்றும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு ஆகியவற்றிற்காக தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றியதற்காக மறைந்த “டாக்டர். மார்த்தா ஃபரெல்” அவர்களுக்கு, புது டெல்லியில் நடைபெற்ற 6-வது இந்திய சமூகப்பணி மாநாட்டில் “வாழ்நாள் சாதனையாளர் விருது – 2018” வழங்கப்பட்டுள்ளது.

Nov 20 - முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு விருது

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு 2017ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதிக்கான விருது வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரில் அமைதி விருது கடந்த 1986-இல் உருவாக்கப்பட்டது.

ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான நவம்பர் 19-ஆம் தேதி இவ்விருது வழங்கப்படுகிறது.

அமைதிக்கான பணிகளுக்காக உழைக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், மனிதநேய நோக்கத்துடன் பொதுச் சேவையாற்றுபவர்கள் ஆகியோர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருதுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான சர்வதேச நடுவர் குழுவானது ஒருமனதாகக் தேர்வு செய்துள்ளது.