Tuesday, October 14, 2025
ஈ. வே. ரா -பெரியார் அவர்கள்
Sunday, October 12, 2025
தேசிய அஞ்சல் வாரம் 2025 பற்றி கீழே அதற்கான முக்கிய விவரங்கள்
Monday, October 4, 2021
பால்வளத்துறையில் பணியிட மாறுதல், புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
Tuesday, September 21, 2021
விஏஓ தேர்வுக்கு தயாரா? உங்களுக்கான சில முக்கிய குறிப்புகள்! | #TNPSC
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வு; தேர்வர்களுக்கான முக்கிய தகவல்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கு தயாராகுபவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இப்போது பார்ப்போம். தமிழக இளைஞர்கள் பெரும்பாலானோரின் கனவு அரசு வேலை. அதிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு இளைஞர்களிடையே கடும் போட்டி இருக்கும். ஆண்டுதோறும் TNPSC தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கு தேர்வர்கள் இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. இதற்கான காரணம் இந்த தேர்வுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி. கூடுதலாக, தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒரே ஒரு எழுத்து தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் உடனடி வேலை. மேலும் சொந்த மாவட்டத்திற்குள் வேலை கிடைக்க வாய்ப்பு. இந்த நிலையில் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான அறிவிப்பு, TNPSC வருடாந்திர அட்டவணைப்படி செப்டம்பர் மாதம் வெளியாக வேண்டும். ஆனால் தற்போது வரை அறிவிப்பு வெளியாகததால், அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், தேர்வு டிசம்பர் இறுதி வாரம் அல்லது ஜனவரியில் நடத்தப்படலாம் என தெரிகிறது. எனவே இந்த தேர்வு குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இப்போது பார்ப்போம்.
என்னென்ன பதவிகள்?
TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, 1. இளநிலை உதவியாளர் (Junior Assistant) 2. தட்டச்சர் (Typist) 3.சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist) 4. கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer) 5. வரித் தண்டலர் (Bill Collector) 6. நில அளவர் (Field Surveyor) 7. வரைவாளர் (Draftsman)
கல்வித் தகுதி
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதுமானது. தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் தேர்ச்சி பெற்றவர்கள் அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். எனவே அவர்களுக்கு கூடுதலான வாய்ப்பு உள்ளது. வயதுத் தகுதி இத்தேர்விற்க்கான வயது தகுதி கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு. அதுவே இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 18 வயது முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரை சலுகை உண்டு. மேலும் அனைத்து பதவிகளுக்கும் மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அதாவது பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை
இந்த பதவிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மொத்தம் 200 வினாக்கள் கொண்டது. அவற்றிற்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் (ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள்) கிடைக்கும். இத்தேர்வில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அவற்றில் 100 வினாக்கள் தமிழ் (அ) ஆங்கிலம் பாட பகுதியிலிருந்து கேட்கப்படும். தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும் 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75-பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.
Tuesday, March 30, 2021
Thirukkural - திருக்குறள்
Wednesday, August 19, 2020
Polity Previous Year Questions and Answers - Part 02 | TNPSC Group I, II, IV | PB Study Corner
Indian Polity Previous Year QA (01-20) - https://bit.ly/3fH0iGV
Indian Polity Previous Year QA (21-40) - https://bit.ly/2YfxQpK
Friday, August 14, 2020
Polity Previous Year Questions and Answers - Part 01 | TNPSC Group I, II, IV | PB Study Corner
Indian Polity Previous Year QA (01-20) - https://bit.ly/3fH0iGV
Indian Polity Previous Year QA (21-40) - https://bit.ly/2YfxQpK
Thursday, August 6, 2020
Wednesday, August 5, 2020
இந்திய அரசியலமைப்பு ஒரு பார்வை
Saturday, July 18, 2020
பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் : சங்காலம் | History,Culture, Heritage and Socio - Political Movements in Tamilnadu
தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் History,Culture, Heritage and Socio - Political Movements in Tamilnadu
Wednesday, June 24, 2020
இந்திய அரசியலமைப்பின் முகவுரை
இந்திய அரசியலமைப்பின் முகவுரை
- முகவுரை என்பது இயற்றப்பட்ட சட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும்.
- முகவுரை அரசியலமைப்பின் தொகுப்பாகவும் அதன் சாரமாகவும் உள்ளது.
- இந்திய அரசியலமைப்பின் முகப்புரை, பண்டித ஜவஹர்லால் நேருவால் டிசம்பர், 13 1946-ல் முன்மொழியப்பட்டு, ஜனவரி 22, 1947-இல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘குறிக்கோள் தீர்மானத்தை’ அடிப்படையாகக் கொண்டு எடுத்தாளப் பெற்ற ஒன்றாகும்.
- இந்திய அரசியலமைப்பு முகவுரையைக் கொண்டே தொடங்குகிறது.
- அமெரிக்க அரசியலமைப்புச் சட்டமே முதன் முதலில் முகப்புரையைக் கொண்டு தொடங்கியது.
முகப்புரை
- இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு இறையாண்மை வாய்ந்த, சமதர்ம நெறி சார்ந்த, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும்
- சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் நீதியும்,
- சிந்தனை வெளிப்பாட்டில் நம்பிக்கையும், பற்றார்வத்தில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும்,
- தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும்,
- உறுதியாகக் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிக்கும் உறுதியளிக்கும் உடன் பிறப்புணர்வை அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும், விழுமிய முறைமையுடன் உறுதி பூண்டு,
1949, நவம்பர் இருபத்து ஆறாம் நாளாகிய இன்று நம்முடைய அரசியலைப்புக் பேரவையில்,ஈங்கிதனால், இந்திய அரசியலமைப்பை ஏற்று, சட்டமாக இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.
முகவுரையின் முக்கிய கலைச் சொற்கள்
- Sovereign – இறையாண்மை – முழவதும் தன்னிச்சையாக செயல்படும் தன்மை, யாருக்கும் உட்படாத தன்மை; மேலும் இதற்கு மேல் உயர்ந்த அமைப்பு இல்லை.
- Socialist – சமதர்மம் – இவ்வாசகம் 1976-ஆம் ஆண்டு 42-வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் வாயிலாக அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
- Secular – மதச்சார்பின்மை – 42-ஆவது சட்டத் திருத்தம் (1976) மூலம் முகவுரையில் சேர்க்கப்பட்டது. (பிரிவு 25 – 28)
- Democratic – மக்களாட்சி – மார்க்சியம் மற்றும் காந்திய சமதர்ம கொள்கைகளை கொண்டது.
- Justice – நீதி – சமூக, பொருளாதார மற்றும் அரசியல் – நீதி
- Liberty – உரிமை, சுதந்திரம் – சிந்தனை, சிந்தனை வெளிப்பாடு, நம்பிக்கை, பற்றார்வம் மற்றும் வழிபாடு
- Equality – சமத்துவம் – தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில்
- Fraternity – சகோததரத்துவம் – தனி ஒருவரின் மாண்பிற்கும், நாட்டின் ஒற்றுமைக்கும்.
முகவுரையின் முக்கியத்துவம்
- அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் எந்நோக்கத்திற்காக அதனை இயற்றினார்கள், அதன் மூலம் அடைய விரும்புகிற அரசியல், சமுதாய மற்றும் பொருளாதார சூழல்கள் பற்றிய குறிப்புகளை முகவுரை பகிர்கிறது.
- யு. பால்கிவாலா- அரசியலமைப்பின் அடையாள அட்டை
- மு.ஆ. முன்ஷி – நம் இறையாண்மையுடைய மக்களாட்சிக் குடியரசின் ஜாதகம்.
- சர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் – எங்கள் நீண்ட நாள் சிந்தமையும் கனவையும் உள்ளடக்கியது.
அரசியலமைப்பின் ஒரு பகுதி – முகவுரை
- அரசியலமைப்பு வரலாற்றில் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியா என்பது குறித்த சிக்கல்கள் எழுந்தன.
- பெரும்வாரி வழக்கில் (1960), உச்சநீதிமன்றம், முகவுரை, அரசிலமைப்பின் பகுதி அல்ல என்று தீர்ப்பளித்தது.
- ஆனால் பின்னால் வந்த கேசவனந்த பாரதி வழக்கில் (1973), முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே என்று தீர்ப்பளித்தது.
- பின்னால் நடந்த எல்.ஐ.சி. வழக்கிலும் (1995) இதே தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
- அரசியல் நிர்ணய சபையின் தலைவரும் இதே கருத்தைக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆனால் இரண்டு விஷயங்கள் குறிப்படத்தக்கன
- முகவுரை சட்டமியற்றுவதற்கான அதிகார மூலம் அல்ல் மேலும், சட்டமியற்றுவதை தடை செய்யும் சாரத்தையும் உள்ளடக்கியதல்ல.
- இது நீதி மன்றங்கள் மூலம் நிறைவேற்றப்படக்கூடிய சட்டம் அல்ல.
முகவுரையும் சட்டத்திருத்தமும்
- கேசவானந்த பாரதி வழக்கில் (1973) முகவுரையை திருத்தம் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
- உச்சநீதிமன்றம் முகவுரையை திருத்தம் செய்ய முடியுமென்றும், மேலும் அவ்வாறு திருத்தம் செய்கையில் அரசியலமைப்பின் ‘அடிப்படைக் கூறுகளுக்கு பாதகம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் கூறியது.
- இதைப் பின்பற்றி 1976-ஆம் ஆண்டு 42-ஆவது சட்டத் திருத்தம்,“சமதர்மம், சமயசார்பற்ற மற்றும் ஒருமைப்பாடு” ஆகிய மூன்று சொற்களை முகவுரையில் சேர்த்தது.
Monday, May 11, 2020
GROUP 2 & 2A SYLLABUS 2020 | UNIT 8 NOTES TAMIL SOCIETY
GROUP 2 & 2A SYLLABUS 2020 | UNIT 8 NOTES TAMIL SOCIETY
TNPSC UNIT-8| TAMIL SOCITY PART -1-6TH SOCIAL OLD
Download here
TNPSC UNIT-8| TAMIL SOCITY PART -2-6TH SOCIAL NEW
Download here
TNPSC UNIT-8| TAMIL SOCITY PART -3-7TH TAMIL NEW
Download here
TNPSC UNIT-8| TAMIL SOCITY PART-4-9TH TAMIL NEW
Download here
TNPSC UNIT-8| TAMIL SOCITY PART-5-9TH SOCIAL OLD
Download here
TNPSC UNIT-8| TAMIL SOCITY PART -6-9TH SOCIAL NEW
Download here
TNPSC UNIT-8| TAMIL SOCITY PART -7-11TH TAMIL OLD
Download here
Tamilnadu Administration full pdf
Download here
Monday, December 10, 2018
பன்றிக் காய்ச்சல் உயிரிழப்பு: 6-ஆவது இடத்தில் தமிழகம்
மிஸ் வேர்ல்டு 2018 போட்டியில் மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன் பட்டம் வென்றார்
சீனாவின் சான்யா நகரில் 68வது உலக அழகி போட்டி இன்று நடைபெற்றது. இதில் மிஸ் வேர்ல்டு 2018 போட்டி நடந்தது. இதில், மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018-ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார். கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி கீரீடத்தை சூட்டினார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு 181 என்ற ஹெல்ப்லைன் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு 181 என்ற ஹெல்ப்லைன் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் இந்த சேவை செயல்பாட்டில் உள்ள நிலையில், தமிழகத்திலும் இந்த சேவையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 இலவச தொலைபேசி எண்ணுக்கான மையம் அமைக்கப்பட்டது.
பரிசோதனை முறையில் இந்த மையம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ‘181’ இலவச தொலைபேசி எண் வசதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்தார். அதற்கான கால்சென்டரையும் தொடங்கி வைத்தார்.
கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது
கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது
பிரபல செய்தி நிறுவனமான லோக் மட் செய்தி நிறுவனம் சார்பில், நாடாளுமன்ற விருதுகள் 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்பட உள்ளது. வரும் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இந்த விருதுகளை வழங்க உள்ளார்.
2018-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற சிறந்த பெண் உறுப்பினருக்கான விருது திமுக எம்.பி. கனிமொழிக்கு வழங்கப்படுகிறது. ''நாடாளுமன்றத்தில் கடந்த பத்தாண்டுகளாக கனிமொழி மகத்தான பங்காற்றியுள்ளார்.
ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்துள்ளார். எனவே மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழிக்கு 2018-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற சிறந்த பெண் உறுப்பினருக்கான விருது வழங்கப்பட உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை டெல்லியில் 13-ம் தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்
2018 ஆண்டு உணவுக்கான குறியீட்டில் இந்தியாவுக்கு 33 வது இடம்
2018 ஆண்டு உணவுக்கான குறியீட்டில் இந்தியாவுக்கு 33 வது இடம்
பொருளாதார நுண்ணறிவு பிரிவு மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான பரில்லா மையத்தால் வெளியிடப்பட்ட, 2018க்கான உணவுக்கான குறியீட்டில் (Food Sustainability Index), இந்தியாவானது 67 நாடுகளில் 33வது இடத்தைப் பிடித்துள்ளது.
பிரான்ஸ் நாடானது முதலிடத்தில் உள்ளது. இக்குறியீடு, மிலனில் நடைபெற்ற BCFN உணவு மன்றத்தில் வெளியிடப்பட்டது.
முக அடையாளம் மூலம் மாணவர்களின் வருகை பதிவு
முக அடையாளம் மூலம் மாணவர்களின் வருகை பதிவு
முக அடையாளம் மூலம் மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் நவீன தொழில்நுட்ப முறை இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிநவீன வருகை பதிவு திட்டம் SMART ATTENDANCE SCHEME என்று பெயரிடப்பட்டுள்ளது.
-
இந்திய அரசியலமைப்பின் முகவுரை முகவுரை என்பது இயற்றப்பட்ட சட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும். முகவுரை அரசியலமைப்பின் த...
-
IBSF சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி பட்டம் வென்றுள்ளார் சாம்பியன்ஷிப் போட்டியில் 150 – UP பிரிவில் இந்திய வீரரான பங்...
-
பெலராஸ் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் மானவ் தக்கார் வெண்கலம் வென்றார். பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில் இந்தப் போட்டிகள் ந...



