Monday, December 10, 2018

பன்றிக் காய்ச்சல் உயிரிழப்பு: 6-ஆவது இடத்தில் தமிழகம்

பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 6-ஆவது இடத்தில் உள்ளது. மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிறமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும். இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது.
அந்த மாநிலத்தில் 422 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பிற மாநிலங்களில் மகாராஷ்டிரத்துக்கு (422 பேர்) அடுத்தபடியாக ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பன்றிக் காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்பு அதிகம்.
ஹெச்1என்1 மற்றும் ஹெச்2என்3 போன்ற பல்வேறு வகையான இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் மூலமாக பன்றிக் காய்ச்சல் பரவுகிறது.
கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமார் 7,500-க்கும் மேற்பட்டோர் அந்தக் காய்ச்சலுக்கு பலியானதாக மத்திய சுகாதாரத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment