அசாமில் 2018 ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற முனின் பார்கோடோகி இலக்கிய விருதின் வெற்றியாளராக, இளம் எழுத்தாளர் மற்றும் விமர்சகரான டாக்டர் தேபாபூசன் போரா அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் எழுதிய இலக்கிய விமர்சகமான “நிர்போசோன்” என்ற புத்தகத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அசாமி மொழியில் எழுதும் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முனின் பார்கோடோகி நினைவு அறக்கட்டளையால் இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருது 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
புகழ்பெற்ற எழுத்தாளர், விமர்சகர் மற்றும் பத்திரிக்கையாளரான முனின் பார்கோடோகி என்பவரது பெயரில் இவ்விருது ஏற்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment