அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக இந்திய மாணவி தேர்வு.
அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சங்க தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ருதி பழனியப்பன் தேர்வாகியுள்ளார்.
இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளி அமெரிக்கப் பெண்ணான ஸ்ருதி பழனியப்பன்(20) 41.5 சதவீதம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார்.
இதே அணியை சேர்ந்த ஜூலியா ஹுயேஸா(20) துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ருதி பழனியப்பனின் பெற்றோர் கடந்த 1992-ம் ஆண்டு சென்னையில் இருந்து அமெரிக்காவில் சென்று குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment