Saturday, November 17, 2018

உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் மனிஷா, சரிதா தேவி வெற்றி

10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

இதில் 54 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்றில் இந்திய வீராங்கனை மனிஷா மோன், உலக போட்டியில் 2 முறை வெண்கலப்பதக்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டினா கிரஸ்சை சந்தித்தார்.

உலக போட்டியில் முதல்முறையாக களம் கண்ட அரியானாவை சேர்ந்த 20 வயதான மனிஷா மோன், 36 வயதான கிறிஸ்டினா கிரஸ்சை  5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முந்தைய சுற்றை எட்டினார்.
அடுத்த சுற்றில் மனிஷா மோன், உலக சாம்பியனான டினா ஜோலாமன்னை (கஜகஸ்தான்) எதிர்கொள்கிறார்.

இதே போல் 60 கிலோ பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் அடியெடுத்து வைத்த முன்னாள் சாம்பியனான இந்திய வீராங்கனை சரிதா தேவி 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தின் டியானா சான்ட்ரா புருஜெரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

No comments:

Post a Comment