Saturday, November 17, 2018

2018ம் ஆண்டின் சிறந்த சொல் விஷம் - ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு

கடந்த 11 வருடங்களாக அந்தந்த ஆண்டின் சிறந்த வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதி வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் சர்வதேச வார்த்தையாக toxic என்னும் வார்த்தையை தேர்வு செய்துள்ளதாக ஆக்ஸ்போர்டு அகராதி செய்தி வெளியிட்டுள்ளது.

டாக்ஸிக் என்றால் விஷம் என்ற பொருள்.
இது லத்தீன் மொழியில் டாக்ஸியஸ் என்ற சொல்லில் இருந்து உருவானது.

17-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இந்த வார்த்தை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்தாண்டு இந்த வார்த்தையைப் பற்றி அதிகம் பேர் விவாதித்ததாக ஆக்ஸ்போர்டு கூறியுள்ளது.

அதனாலேயே இந்த வார்த்தையை இந்தாண்டின் சிறந்த வார்த்தையாக தேர்வு செய்ததாக அது விளக்கம் அளித்துள்ளது. 

No comments:

Post a Comment