ஆந்திராவில், நிலம் தொடர்பான ஆவணங்களை மக்கள் பார்க்கும் வகையில், 'புதார்' என்ற இணையதளத்தை, அம்மாநில அரசு துவக்கி உள்ளது.
மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள, ஆதார் எண்ணை போன்று, ஆந்திராவில், நில ஆவணங்களுக்கு, 'புதார்' என்ற, 11 இலக்க அடையாள எண் அளிக்கப்படுகிறது. ஆந்திராவில் உள்ள அனைத்து விவசாய நிலம், ஊரக, நகர்ப்புற சொத்துகளுக்கு, 'புதார்' அடையாள எண் வழங்கப்படுகிறது. இந்த எண்ணை பயன்படுத்தி, மக்கள், தங்கள் நிலம் மற்றும் சொத்துகள் தொடர்பான ஆவணங்களை, 'புதார்' என்ற அரசு இணைய தளத்தில் பார்க்கலாம். ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியில், இந்த திட்டத்தை, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு, துவக்கி வைத்தார்.
No comments:
Post a Comment