Wednesday, November 21, 2018

Nov 18 - மாலத்தீவு புதிய அதிபராக சாலிக் பதவி ஏற்பு

மாலத்தீவின் புதிய அதிபரான இப்ராகிம் மொகமது சாலிக் பதவியேற்பு விழாவில் நேரில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார்.

அதை தொடர்ந்து புதிய அதிபராக அவர் பதவியேற்றார். தலைநகர் மாலேவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பங்கேற்றார்.

அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  புதிய அதிபராக பதவியேற்ற இப்ராகிம் மொகமது சாலிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment