Thursday, November 22, 2018

Nov 20 - ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான புதிய தலைமைப் பிரதிநிதி

சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கியானது (BIS - Bank for International Settlements) சித்தார்த் திவாரியை ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான தலைமைப் பிரதிநிதியாக நியமித்துள்ளது. இதற்குமுன் எலி ரிமோலோனா இப்பதவியை வகித்தார்.

ஹாங்காங்கின் சிறப்பு நிர்வாகப் பகுதியில் உள்ள BIS-ன் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான அலுவலகத்தில் சித்தார்த் பணியாற்றுகிறார்.

BIS என்பது சர்வதேச நாணய மற்றும் நிதியியல் ஒத்துழைப்பை ஏற்படுத்த மத்திய வங்கிகளால் நிர்வகிக்கப்படும் சர்வதேச நிதியியல் நிறுவனமாகும்.

மேலும் BIS ஆனது மத்திய வங்கிகளுக்கு வங்கியாக செயல்படுகிறது.  

No comments:

Post a Comment